புது வீடு கட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்..! வாஸ்து டிப்ஸ்

புதுவீடு கட்டுவது என்பது பலரின் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. அந்த வீட்டை கட்டும்போது செய்யும் வாஸ்து தவறுகள் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 3, 2023, 06:49 PM IST
  • புது வீடு வாஸ்து முறைகள்
  • பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம்
  • யோசித்து புது வீடு கட்டுங்கள்
புது வீடு கட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்..! வாஸ்து டிப்ஸ் title=

புது வீடு ஆசை

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். அதுபோலவே வீடு அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான். வீடு கட்டும் போது பொதுவாக வாஸ்த்து பார்த்து தான் கட்டுவார்கள். கட்டிடம் கட்ட சரியான முறையில் வாஸ்து பார்க்க வேண்டும். வாஸ்து நன்றாக இருப்பது பண வருமானத்திற்கு மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம். பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் நம் நாட்டின் அனைத்து கலைகளுமே தோன்றியுள்ளன. ஆகவே இதன் அடிப்படையில் தான் வாஸ்தும் பார்ப்பார்கள்.

மேலும் படிக்க | உதயமானார் குரு: இந்த ராசிகளுக்கு பம்பர் அதிர்ஷ்டம், முழு ராசிபலன் இதோ

வாஸ்து எப்படி இருக்க வேண்டும்?  

அதனால், வீடு கட்டும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? என்பதை பார்க்கலாம். வீட்டின் பூஜையறையானது வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். சுவாமி படங்களை கிழக்கு திசையில் வைக்க வேண்டும். கிழக்கு திசையில் சமையல் அறை மற்றும் கழிப்பறைகள் அமைக்க கூடாது. துளசி மடத்தினை வீட்டின் முன் பக்கத்தில் வைப்பது நல்லது. மேலும், கிழக்கு திசை பார்க்கும் படி இருந்தால் மிகவும் நல்லது.

படுக்கை அறைகள் எங்கு இருக்க வேண்டும்?

விளக்குகள் கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது. படுக்கை அறைகள் வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது சிறந்தது. தலையை கிழக்கு நோக்கி வைத்து தூங்கினால் மாணவர்களுக்கு நேர்மறை ஆற்றல் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும். வீட்டின் தென் கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைவதும், கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்லது. வீட்டிற்காக கிணறு தோண்டும் போது வீட்டின் வடக்கு அல்லது வட கிழக்கு பக்கத்தில் தோண்டுவது மிக அவசியம். வீட்டின் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். இந்த அடிப்படையில் கட்டினால் உங்கள் வீட்டில் செல்வங்கள் சேரும், எந்த சிக்கல்களும் இருக்காது.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2023: 139 நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News