2024 ஆகஸ்ட் மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? சிம்மத்துக்கு சூப்பர் துலாமுக்கு சுமார், உங்களுக்கு?

Lucky Zodiac Signs of August 2024: இன்னும் இரு நாட்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? அறிவோம் ராசிபலன்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 29, 2024, 10:39 AM IST
  • ஆகஸ்ட் மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்
  • பண்டிகைகள் நிறைந்த மாதம்
  • ஆகஸ்ட் மாதத்தில் விநாயகரின் அருள் பெறும் ராசிகள்
2024 ஆகஸ்ட் மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? சிம்மத்துக்கு சூப்பர் துலாமுக்கு சுமார், உங்களுக்கு? title=

Lucky Zodiac Signs of August 2024: இன்னும் இரு நாட்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த மாதத்தில் சில முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்ற உள்ளன. இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆகஸ்ட் மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்குமான ராசிபலன் அறிவோம்...

மேஷம்
குடும்ப வருமானத்தை மேம்படுத்தும் முயற்சிகள் வெற்றிபெறும். புதிய முயற்சிகளை உத்வேகத்துடன் தொடங்கினாலும் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். நிதானமும் பொறுமையும் அவசியம் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். வாழ்க்கை பற்றிய புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். 

ரிஷபம்
விவேகமும் புத்திசாலித்தனமும் அவசியம் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். சந்தேகபுத்தியால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ரிஷப  ராசிக்காரர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் செயல்படுவது நல்லது. பலதரப்பட்ட சிந்தனைகளால் மனகலக்கம் ஏற்படும், ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.  

மிதுனம்
சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வழிபாடுகள் மற்றும் ஆன்மீக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து உங்கள் மனதை மகிழ்விக்கும்.  

கடகம் 
அனுபவம் அனுகூலம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். விவசாய துறைகளில் மேன்மை ஏற்படும்.  

மேலும் படிக்க | ஸ்ரீ சக்கர வழிபாட்டின் மகத்துவம்! லலிதா திருபுர சுந்தரியை வணங்கும் வழிமுறைகள்!

சிம்மம் 
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் அவசியம், பணியாளர்களிடம் அதிக நெருக்கம் காட்டுவது நல்லதல்ல. பணிபுரியும் இடத்தில் மதிப்பு கூடும். திட்டமிட்ட சில பணிகளில் தாமதம் உண்டாகும். நிம்மதி அதிகரிக்கும் மாதம் இது.

கன்னி 
சோம்பலாக இருந்தால் எந்தவொரு விஷயத்திலும் சரியாக செயல்பட முடியாது என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதில் அலைச்சல் உண்டாகும். சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. வர்த்தகர்களும், கடை வைத்திருப்பவர்களும் தங்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும்.  

துலாம் 
கெளரவ பொறுப்புகள் வந்து சேரும், தம்பதிகளிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால், பணியில் உற்சாகம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  

விருச்சிகம்
தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விருச்சிக ராசியினருக்கு மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். தேடல் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும், நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். நிர்வாகத் திறமை வெளிப்படும் அதே நேரத்தில், உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள்.  

மேலும் படிக்க | நாகா சாதுக்கள் செய்யக்கூடாத தவறுகள்! அகோரிகள் தப்பு செய்தால் தண்டனையும் அகோரம்!

தனுசு
பொழுதுபோக்கு என்பது பொழுதை போக்கவும், மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காகவும் தான். ஆனால், அதுவே செலவுகளை அதிகரித்து சங்கடத்தை ஏற்படுத்தும் என்றால் அதை கவனமாக கையாள வேண்டும் என்ற படிப்பினைக் கிடைக்கும். உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்து உங்களுக்கு பங்கு கிடைக்கும், கடினமான வேலையையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.  

மகரம்
கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும் மாதம் இது, நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சோர்வு குறைந்து உற்சாகம் பிறக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வருமான வாய்ப்புகள் உண்டாகும்.  

கும்பம் 
மனதில் eதிர்காலம் தொடர்பான செயல் திட்டம் பிறக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு குழப்பமான காலமாக இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் அதேவேளையில், பிறரின் எதிர்பார்ப்புகளையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். பாக பிரிவினையால் உங்கள் நிதி நிலைமை கணிசமாக அதிகரிக்கும்.  

மீனம்
உங்கள் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கும் காலம் இது, வாக்கு சாதுரியம் அதிகரிக்கும். புதிய அறிமுகமும், செல்வாக்கும் அதிகரிக்கும். குடும்பத்தினர் மீதான நம்பிக்கை மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Astro:  தலைவனாகும் அனைத்து பண்புகளும் ‘இந்த’ ராசிகளுக்கு உண்டு... உங்க ராசி என்ன.!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News