தீபாவளிக்கு முன் பணம் வசூல் உங்களுக்குத் தானே? இது சுக்கிர பெயர்ச்சி பம்பர் லாபம்

November Planet Transit: கேதுவுடன் இணையும் சுக்கிரனால் மகிழ்ச்சியடையப் போகும் அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 2, 2023, 12:29 PM IST
  • கேதுவுடன் இணையும் சுக்கிரன்
  • சுக்கிரனால் சுகம் அனுபவிக்கப் போகும் ராசிகள்
  • தீபாவளியை நிம்மதியாக கொண்டாடும் ராசியினர்
தீபாவளிக்கு முன் பணம் வசூல் உங்களுக்குத் தானே? இது சுக்கிர பெயர்ச்சி பம்பர் லாபம் title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் அனைத்துமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. நவம்பர் 3 ஆம் தேதி, சுக்கிரன் கன்னியில் சஞ்சரிக்கப் போகிறார் மற்றும் கேது ஏற்கனவே இங்கே இருக்கிறார். கன்னி ராசியில் கேதுவும் சுக்கிரனும் இணைவது சிலரின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்யும். கேதுவுடன் இணையும் சுக்கிரனால் மகிழ்ச்சியடையப் போகும் அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
  
கேது-சுக்கிரன் இணைவு 2023

செல்வம் மற்றும் ஆடம்பரம், சுகத்திற்கு காரகரான சுக்கிரன், சிம்ம ராசியில் இருந்து விலகி கன்னி ராசிக்கு நவம்பர் 3 ஆம் தேதி மாறவிருக்கிறார். நவம்பர் 29 வரை அங்கிருக்கும் சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைவார். கேது கிரகம் ஏற்கனவே கன்னி ராசியில் உள்ள நிலையில் சுக்கிரனும் கேதுவும் இணைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபபலன்களைக் கொடுக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
 
மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்கள் சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கையால் பலன் பெறப் போகிறார்கள். முதலீடு தொடர்பான முக்கியமான தகவல்கள் வந்துசேரும்.  எண்ணங்கள் மற்றும் செயல்கள் குறித்த தெளிவு ஏற்படுவது, வர்க்கத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். கேதுவின் செல்வாக்கு அறிவை விசாலாம்க்கும் அதே நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை பார்ப்பவரகளுக்கு பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும்.  திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் மற்றும் உறவுகள் வலுவடையும். இந்த நேரத்தில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

மேலும் படிக்க | கன்னியில் ராகு பெயர்ச்சி... அடுத்த 18 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு கஷ்ட காலம்!
 
கடக ராசி - Cancer 

கடக ராசி உள்ளவர்களுக்கு, சுக்கிரன் மற்றும் கேதுவின் இணைவு மங்களகரமானதாக இருக்கும். திட்டமிட்டு செய்தால் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்பவர்களும் நிம்மதியான காலம் இது. பணவரத்து மேம்படும், அதிலும் பண்டிகை காலத்தில் கேதுவுடன் சுக்கிரன் இணைவதால், நல்ல நிதி ஆதாயங்களைக் கொண்டுவரும். குழந்தைகளுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான புதிய சிந்தனை தோன்றும்.  
 
கன்னி - Virgo 

சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார், கேது ஏற்கனவே இங்கே இருக்கிறார். கேதுவுடன் ஒரே வீட்டில் இருக்கும் சுக்கிர பகவான், கன்னி ராசிக்காரர்களுக்கு ஆன்மிகச் செயல்களில் நாட்டத்தை அதிகரிக்கச் செய்வார். அதுமட்டுமின்றி, சமயச் செயல்களைச் செய்வதன் மூலம் மன அமைதியைப் பெறலாம். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டு. கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும், பெற்றோருடன் நல்லுறவு இருக்கும்.
 
விருச்சிகம் -Scorpio  

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அலைசல் குறைந்து ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். கிரகங்களின் சுபச் செல்வாக்கு திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து வெளி கொண்டுவரும். விருப்பங்கள் நிறைவேறும் என்றலும், அதற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.. முழு ராசிபலன் இதோ
 
தனுசு -Sagittarius

இலக்குகளை அடையும் நேரம் இது, முழுமையடையாத வேலையை முடிக்க முழு வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் இதுவரை இருந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவீர்கள். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். வீட்டில் சமய நிகழ்வுகள் நடைபெறும்.  சகோதர சகோதரிகளுடனான உறவுகள் வலுவடையும். பொருளாதார நிலை வலுப்பெறும்.  
 
மகரம் - Capricorn

கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால், மகர ராசிக்காரர்களுக்கு தைரியம் மற்றும் துணிச்சல் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த நல்ல வாய்ப்பு உள்ளது. சமுதாயத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். எடுக்கும் காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டு. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், சகோதரிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் வெற்றியும், பணப் பலன்களும் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | சனி, சுக்கிரன் மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News