மார்ச் மாத பலன் 2023: சனியால் பாதகம் ஏற்பட்டாலும் குரு கை கொடுப்பார்..நம்பிக்கையாக இருங்கள்

மார்ச் மாதத்தில் சனி, குரு மற்றும் சூரிய பகவானின் அருள் பார்வை எந்தெந்த ராசிகளுக்கு அனுகூல பலன்களையும், எச்சரிக்கையையும் கொடுக்கின்றன என்பதை பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 11, 2023, 12:51 PM IST
 மார்ச் மாத பலன் 2023: சனியால் பாதகம் ஏற்பட்டாலும் குரு கை கொடுப்பார்..நம்பிக்கையாக இருங்கள்  title=

மார்ச் மாதத்தில் சூரிய பகவான் கும்பம் மற்றும் மீனம் என இரு ராசிகளில் பயணிக்க இருக்கிறார். மீன ராசியில் குரு பகவான் வீற்றிருக்க, ராகு மேஷத்திலும், கேது துலாம் ராசியிலும் இருப்பார்கள். சனி பகவான் கும்ப ராசியில் வீற்றிருப்பார். அனைத்து கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிகளுக்கும் அனுகூல பார்வையும், பாதக அம்சங்களும் ஏற்பட இருக்கிறது. எந்தெந்த ராசிகளுக்கு அப்படி இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்

கடகம் 

கடக ராசிக்காரர்களுக்கு முதல் சில நாட்கள் சிறப்பாக இருக்கும். உங்களின் வேலை வாய்ப்பு முயற்சிகள் உடனடி பலன் கிடைத்து நல்ல வேலையில் அமருவீர்கள். பணியிடத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொறுமையும் நிதானமாகவும் நீங்கள் செயல்படுவது சமார்த்தியமாக இருக்கும். திருமண முயற்சி, உறவினர்களிடையே பிரச்சனை என அனைத்து திசைகளிலும் ஏதாவதொரு பிரச்சனைகள் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். படிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆகையால், இம்மாதம் முழுவதும் நிதானமாகவும், பொறுமையுடன் சிந்தித்து செயல்படுங்கள்.

சிம்மம்

கிரகங்களின் நிலையை பார்க்கும்போது உங்களுக்கு ராஜயோகம் கிட்டும் மாதமாக மார்ச் இருக்கும். ஏழாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் குரு ஆகியோர் வீற்றிருப்பார்கள். இதனால் நல்ல அனுகூல பலன்கள் கிட்டும். கண்டச்சனி காலம் இருப்பது என்றாலும் வீபரீதங்கள் குறைந்து சம பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இரவு நேர வாகன பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க | 4 நாட்களில் 'எதிரி கிரகங்களின்' கூட்டணி முடிகிறது! சனி பகவானின் ஆசி இனி உங்களுக்கே

கன்னி 

பண வருவாய் சிறப்பாக இருக்கும் மாதமாக உங்களுக்கு மார்ச் மாதம் இருக்கும். மாளவியா யோகமும், ஹம்ச யோகமும் கிடைக்கப்போகிறது. இதன் அருளால் கிடைக்கும் செல்வங்களை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதேநேரத்தில் பொறாமை மற்றும் எதிர்ப்புகள் இருக்கும். முதலீடுகளில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் சாதனை புரியும் மாதமாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இது அற்புதமான மாதம். நினைத்தது நிறைவேறும். வயிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

மேலும் படிக்க | Shani Uday: பாவம் போனா போகுது என சனீஸ்வரர் கண்டு கொள்ளாத ராசிகள் எவை தெரியுமா?

மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு சனி சுக்கிரன் சேர்க்கை, இந்த ராசிகளுக்கு புரமோசன் கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News