நவம்பர் மாதம் சில ராசிகள் உச்சம் தொடும், சில ராசிகள் சிக்கலில் சிக்கும்: உங்க ராசி என்ன?

Monthly Horoscope November 2022: இந்த மாதம் எந்த ராசிகள் சாதமாக பலன்களை பெறுவகள், யார் பாதகமான பலன்களை பெறுவார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2022, 11:24 AM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.
  • உங்கள் செயல்திறன் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படும்.
  • பணி இடத்தில் பல சவால்கள் தலைதூக்கும்.
நவம்பர் மாதம் சில ராசிகள் உச்சம் தொடும், சில ராசிகள் சிக்கலில் சிக்கும்: உங்க ராசி என்ன?  title=

நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. பொதுவாக இந்த மாதம் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த மாதம் சில பெரிய கிரகங்களின் மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். கன்னி, கடகம் மற்றும் தனுசு உள்ளிட்ட சில ராசிகள் இந்த மாதத்தில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகளாக இருக்கும். அதேசமயம் ரிஷபம், மகரம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகள் சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். இந்த மாதம் எந்த ராசிகள் சாதமாக பலன்களை பெறுவகள்? யார் பாதகமான பலன்களை பெறுவார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

நவம்பர் மாத அதிர்ஷ்ட ராசிகள்:

கன்னி: 

இந்த மாதம் குரு பகவானின்மாற்றம் நிகழவுள்ளது. இந்த மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிக நல்லதாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் உலகக் கண்ணோட்டத்தை இந்த காலத்தில் விரிவுபடுத்திக்கொள்வார்கள். இதன் காரணமாக வாழ்க்கையைப் பற்றிய முதிர்ந்த மற்றும் அதிக புரிதல் கொண்ட கண்ணோட்டத்தைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் உறவுகல் மேலோங்கும். 

மாதத்தின் நடுப்பகுதியில், சுக்கிரன் அருளால் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஊதிய உயர்வு மற்று பதவி உயர்வு கிடைக்கும். நிதி நிலை மிக நன்றாக இருக்கும். வேலையில் அர்ப்பணிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த காலம் முதலீட்டிற்கு ஏற்ற காலமாக இருக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் ஏற்படும் கிரக மாற்றங்கள் அபரிமிதமான நல்ல பலன்களை அள்ளித்தரும். புதிய கலைகளை கற்றுக்கொள்வீர்கள். இதனால் ஆதாயம் அடைவீர்கள். நிதி நிலை மிக நன்றாக இருக்கும்.

இந்த காலத்தில் உறவுகளை பேணிக்காப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் அன்பாக நடந்துகொள்வீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்கு இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்களுக்கு மிக நல்ல இது மிக நல்ல நேரமாக இருக்கும். உங்கள் மென்மையான பேச்சால் இந்த நேரத்தில் அனைவரது மனதையும் கொள்ளை கொள்வீர்கள். 

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் முதலீடுகளுக்கு ஏற்ற மாதமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுக்ளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ல தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும். 

மேலும் படிக்க | நீசபங்க ராஜயோகம்: சூரியனின் அளவற்ற அருளால் வெற்றிகளை குவிக்கும் ‘3’ ராசிகள்! 

நவம்பர் மாதம் பாதகமான விளைவுகளை சந்திக்கவுள்ள ராசிகள்

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் செயல்திறன் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படும். பணி இடத்தில் பல சவால்கள் தலைதூக்கும். இந்த காலத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். 

உங்கள் பேச்சால் சில பிரச்சனைகள் வரகூடும். நாவடக்கம் முக்கியம். குடும்ப ஊறுப்புனர்களுடன் பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள். 

மகரம்: 

இந்த மாதம் மகர ராசிக்காரர்களுக்கு சுய மரியாதை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் பேச்சு எடுபடாமல் மன நிலை அமைதியற்று போகலாம். மிகுந்த பொறுமையுடனும் புரிதலுடனும் செயல்பட வேண்டியது மிக முக்கியமாகும்.

அலுவலகத்தில் உங்கள் வேலையை மட்டும் செய்து மற்றவர் பணியி தலையிடாமல் இருந்தால், பல பிரச்சனைகளை எளிதாக தவிர்க்க முடியும். குடும்பத்திலும் அதிக வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பல வித சவால்கள் நிறைந்த மாதமாக இந்த நவம்பர் மாதம் இருக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். சிறு வாக்குவாதமும் பெரிய சண்டயாகும் சூழல் உருவாகும்.

பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். இந்த காலத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. அபாய விளைவுகளுக்கான சாத்தியக்கூறுகள் உள்ள எந்த வேலையையும் செய்ய வேண்டாம். 

மேலும் படிக்க | சனி வக்கிர நிவர்த்தி: இந்த ராசிகளின் வாழ்வில் புயலைக் கொண்டு வரும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News