புதன் வலுவிழந்தா என்ன? சிம்மத்தில் சூரியன் சும்மா விட்டுடுவாரா? 4 ராசிகளுக்கு பொற்காலம் தான்!

Mercury Combust In Leo Effects : சிம்மத்தில் தனது வலுவை புதன் இழந்தால் யாருக்கு நல்ல காலம் பிறக்கும்? சூரியனின் ஆதிக்கத்திற்கு அடிபணிவாரா புத பகவான்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 13, 2024, 04:46 PM IST
  • நாளை முதல் 5 ராசிகளுக்கு ராஜராஜ பொற்காலம் தான்!
  • புதன் கொடுத்தால் யார் தடுப்பார்?
புதன் வலுவிழந்தா என்ன? சிம்மத்தில் சூரியன் சும்மா விட்டுடுவாரா? 4 ராசிகளுக்கு பொற்காலம் தான்! title=

Latest Mercury Combust: புத்திசாலித்தனத்தை குத்தகைக்கு எடுத்திருப்பவர்களாக இருப்பவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். அதேபோல புதனின் தாக்கம் அதிகமாக உள்ளவர்கள், அறிவுசார் செயல்பாடுகள், கல்வி கலை, தகவல் தொடர்பு திறன் என பல விஷயங்களில் கில்லாடியாக இருப்பார்கள். ஆனால், சிம்மத்தில் உள்ள புதன், எரிப்பு நிலைக்கு செல்லும்போது தனது வலுவை இழப்பார். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

நாளை, அதாவது செப்டம்பர் 14ம் தேதியன்று சிம்ம ராசியில் புதன் எரிப்பு நிலைக்கு செல்கிறார். பொதுவாக, புதன் வலுவிழக்கும்போது, பாதுகாப்பின்மை, அசிரத்தை, மந்தத்தன்மை, நினைவு குறைபாடு என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். புத்திசாலி கிரகமான புதன், நாள பிற்பகல் 12:50 மணிக்கு சிம்மத்தில் எரிப்பு நிலையை அடையும்.

புதன் எரிப்பு நிலையானது, அதனுடைய சொந்த ராசிகளான மிதுனம் மற்றும் கன்னியில் இருந்தால், அது நன்மை பயப்பதாக அமையும்.  

‘ஒரு கிரகத்தின் எரிப்பு நிலை’ என்பதன் பொருள்

ஜோதிட சாஸ்திரங்களின்படி, நிழல் கிரகங்களான ராகு/கேதுவைத் தவிர வேறு எந்த கிரகமும் சூரியனுக்கு அருகில் அதாவது பத்து டிகிரிக்குள் வரும்போது எரிப்பு நிலை ஏற்படுகிறது. அதாவது மிகவும் நெருங்கும் கிரகங்களின் ஆற்றலை சூரியன் செயலற்றதாக மாற்றிவிடும்.  

ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுவதைப் போலவே, ஒரு கிரகத்தின் எரிப்பு நிலையும் முக்கியத்துவம் பெறுகிறது.  

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு ஜாக்பாட்! புதாதித்ய யோகத்தால் சூரியனின் ஆசி பெறும் 5 ராசிகள்!

ஜோதிடத்தில் புதன் எரிப்பு
புத்தி, தர்க்கம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிற்கு அதிபதியான புதன் வலுவிழந்தால், அதிலும் சிம்மத்தில் வலுவை இழப்பதால் சூரியனின் தாக்கத்தினால் மட்டுமே பலன் பெறும் ராசிகள் எவை என்பதை அறிந்துக் கொள்வோம்.

மிதுனம் (Gemini Zodiac Sign): சிம்மத்தில் புதன் எரிப்பு நிலைக்கு செல்வது, மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் ஏற்றத்தைக் கொடுக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும், திருமண வாழ்க்கையில் சற்று குழப்பங்கள் உண்டாகும் என்றாலும், குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் எரிப்பு நிலை நல்லவற்றை நடத்தித் தரும்.  

துலாம் (Libra Zodiac Sign): சிம்ம ராசியில் கிரகங்களின் இளவரசரான புதன் எரிப்பு நிலைக்கு செல்வதால் துலாம் ராசிக்காரர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்வதற்கு சரியான நேரம். இந்த காலகட்டத்தில்,தொட்டதெல்லாம் துலங்கும், மனதில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம் (Capricorn Zodiac Sign): சிம்மத்தில் புதன் சூரியனை மிகவும் அருகில் நெருங்குவதால், மகர ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் காரணமாக, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலையும் முன்னேற்றம் அடையும்.  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனீஸ்வரரின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பிரச்சனை தான்! கவலையில் கண்ணீர் விடப்போகும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News