பணம், பதவி, புகழ்: குருவின் அருளால் இந்த ராசிகள் வாழ்வில் திகட்ட திகட்ட மகிழ்ச்சி பொங்கும்!!

Guru Vakra peyarchi: சில ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியால் அதீத நற்பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு 118 நாட்கள் பொற்காலமாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 2, 2023, 06:02 PM IST
  • குரு பகவானின் வக்ர பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும்.
  • ஆனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • இந்த காலகட்டத்தில், பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பணம், பதவி, புகழ்: குருவின் அருளால் இந்த ராசிகள் வாழ்வில் திகட்ட திகட்ட மகிழ்ச்சி பொங்கும்!!  title=

குரு வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் வக்ர பெயர்ச்சி மற்றும் வக்ர நிவர்த்திகளால்  சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படுகின்றன. செப்டம்பர் 4 ஆம் தேதி, குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். குருவின் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப விளைவுகளையும் அளிக்கும். ஜோதிட சாஸ்திரத்தில், குரு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், புகழ், பெருமை, செல்வம் போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு சுபமாக இருந்தால், அந்த நபர் அனைத்து விதமான செல்வச்செழிப்புகளையும் பெறுகிறார். அவருக்கு பணத்திற்கு குறைவே இருப்பதில்லை. எடுத்த அனைத்து காரியங்களிலும் அவர் வெற்றியை காண்கிறார். 

ஜோதிடத்தின்படி, குரு பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். குரு வக்ர பெயர்ச்சி சில ராசிகளுக்கு அசுபமாக இருக்கும். இந்த காலத்தில் இவர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியால் அதீத நற்பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு 118 நாட்கள் பொற்காலமாக இருக்கும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார, வியாபார பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசி

குரு பகவானின் வக்ர பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். ஆனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிதாக ஏதாவது செய்ய நினைப்பவர்களுக்கு இந்த நேரம் சாதமகாக இருக்கும். இப்போது அவர்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில், பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்கள் குருவின் வக்ர பெயர்ச்சியால் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் உருவாகும் விபரீத ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. வாழ்க்கை துணைக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். கடினமான காலங்களில் இருந்து வெளியே வருவீர்கள். 

மேலும் படிக்க | அள்ளிக்கொடுப்பார் குரு: குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றிகள் குவியும்

சிம்ம ராசி

ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியால் அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் வெற்றி பெறுவார்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அதே நேரத்தில், குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் வலுவடையும்.

துலாம் ராசி

வக்ர நிலையில் குரு பயணிப்பது துலா ராசிக்காரர்களுக்கு சாதமகாக இருக்கும். இவர்களது வாழ்வில் நல்ல மாற்றம் தெரியும். இந்த காலகட்டத்தில் உங்கள் மனைவியுடனான கருத்து வேறுபாடுகள் தீரும். திருமணத்திற்கு ஏற்ற துணையை தேடும் துலா ராசிக்காரர்களின் தேடல் முடிவடையும். நல்ல வாழ்க்கைத் துணையை பெறுவீர்கள். ஜோதிடத்தின்படி, நீதித்துறை விஷயங்களிலும் வெற்றி வாய்ப்புகள் உள்ளன. பலம் கூடும் மற்றும் பல துறைகளில் வெற்றி பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. நீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் சந்திக்கும் சூரியன்-சனி... சிக்கலை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News