500 ஆண்டுகளுக்கு பின் வரும் கேதார யோகம்... இந்த 3 ராசிகளுக்கு செல்வம் செழிக்கும்!

Kedar Yoga 2023: 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 23ஆம் தேதி, கேதார யோகம் உருவாகிறது. இதுமட்டுமின்றி சில ராசிக்காரர்களின் வாழ்விலும் சாதகமான மாற்றங்கள் காணப்படும்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 15, 2023, 02:28 PM IST
  • ஜாதகத்தின் நான்கு வீடுகளிலும் 7 கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் உருவாகும்.
  • கிரகங்களின் இயக்கத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப்படும்.
500 ஆண்டுகளுக்கு பின் வரும் கேதார யோகம்... இந்த 3 ராசிகளுக்கு செல்வம் செழிக்கும்! title=

Kedar Yoga 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரங்கங்களின் சேர்க்கையின் போது ஜாதகத்தில் சுப, அசுப யோகங்கள் அமைவதும் ஒவ்வொருவரின் வாழ்விலும் அதன் தாக்கத்தை காட்டும். 

500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 23ஆம் தேதி, கேதார யோகம் உருவாகிறது. இதுமட்டுமின்றி சில ராசிக்காரர்களின் வாழ்விலும் சாதகமான மாற்றங்கள் காணப்படும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்கள் கிடைக்கும் இங்கு காண்போம். 

கேதார யோகம் என்றால் என்ன?

ஜோதிடத்தின் படி, கேதார யோகம் ஒரு அரிய மற்றும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தின் நான்கு வீடுகளிலும் 7 கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் உருவாகும் என்பது ஐதீகம். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வரும் கேதார யோகம் மக்களின் வாழ்வில் செல்வச் செழிப்பைத் தரும். https://zeenews.india.com/tamil/spiritual/fate-will-shine-for-these-zodi...

மேலும் படிக்க | கிருஷ்ண பக்ஷ அமாவாசையில் வரும் சூரிய கிரகணம்...! 3 ராசிகளுக்கு இருக்கும் எச்சரிக்கை

மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் சமூக மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இதுமட்டுமின்றி, அனைத்து இலக்குகளையும் எளிதாக அடைவதில் இந்த நேரத்தில் வெற்றி கிடைக்கும். தொழிலிலும் தீவிரமாக இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் காதல் விவகாரங்களில் இருந்த தவறான புரிதல்களும் நீங்கும். கிரகங்களின் இயக்கத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப்படும்.

சிம்மம்

ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 23க்கு பிறகு, சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும். இந்த நேரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் லாபம் அடைவார்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு கேதார யோகம் சாதகமான பலன்களைத் தரும். உங்கள் நிதி நிலை மேம்படும். மனைவியுடன் உறவு வலுவாக இருக்கும். நீங்கள் அவர்களுடன் நன்றாக நேரம் செலவிடுவீர்கள். ஆன்மீக பணிகளில் அதிக நேரம் செலவிடுவீர்கள். இந்த நேரத்தில் தொழில் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ நியூஸ் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிகள் மீது சனியின் சுப பார்வை: இவங்களுக்கு அடிச்சது ஜாக்பாட், தலைவிதி மாறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News