இன்னும் 10 நாட்களில் இந்த ராசிகளுக்கு சூர்யோதயம்: புதனின் அருளால் மகிழ்ச்சி மழையாய் பொழியும்

Budh Ast and Uday 2023: மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் புதன் அஸ்தம காலத்தில் பல வகையான இழப்புகளை சந்திக்க நேரிடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 2, 2023, 06:46 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் சுபமாக இருக்கும்.
  • இவர்களுக்கு அதிக பண வரவு இருக்கும்.
  • குடும்பத்துடன் சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
இன்னும் 10 நாட்களில் இந்த ராசிகளுக்கு சூர்யோதயம்: புதனின் அருளால் மகிழ்ச்சி மழையாய் பொழியும் title=

புதன் உதயம் 2023: ஜோதிடத்தில், புதன் செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இன்று, ஜனவரி 2, 2023, திங்கட்கிழமை, புதன் மாலை 6.27 மணிக்கு அஸ்தமமானது, அதாவது நீச்சம் பெற்றது. புதன் ஜனவரி 12 வரை இந்த நிலையில் இருக்கும். ஜோதிடத்தில், கிரகங்களின் அஸ்தமனம் சுபமாக கருதப்படுவதில்லை. கிரகத்தின் அமைப்பு அதிலிருந்து கிடைக்கும் பலனை பலவீனப்படுத்துகிறது. புதன் அஸ்தமமாவதும், 10 நாட்களுக்குப் பிறகு புதன் உதயமாவதும் ராசிக்காரர்களுக்கு என்னென்ன சுப, அசுப பலன்களைத் தரும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

புதன் அஸ்தமமாவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும்

மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் புதன் அஸ்தம காலத்தில் பல வகையான இழப்புகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்களுக்கு முதலீட்டில் நஷ்டம் ஏற்படும். பண இழப்பு ஏற்படலாம். குறுக்குவழி மூலம் பணம் சம்பாதிப்பது நஷ்டத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம்.

புதனின் உதயத்தால் இவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

புதன் உதயமான உடனேயே சிலரது அதிர்ஷ்டம் பிரகாசமாகும். 2023 ஜனவரியில் புதனின் உதயம் 3 ராசிக்காரர்களுக்கு வலுவான பலன்களைத் தரும். புதன் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | கும்ப ராசிகளுக்கான வருட பலன்கள்... ஆண்டியாவதும் அரசனாவதும் உங்கள் கையில்! 

துலா ராசி: 

2023 ஜனவரியில் புதனின் உதயம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். இதன் காரணமாக அனைத்து பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர், குறிப்பாக உடன்பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். இரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சாதகமாக இருக்கும்.

சிம்ம ராசி: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் சுபமாக இருக்கும். இவர்களுக்கு அதிக பண வரவு இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டில் படிக்கும் கனவு நனவாகும். உறவுகள் வலுவாக இருக்கும். மொத்தத்தில், தனிப்பட்ட வாழ்க்கையும் தொழில் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

தனுசு ராசி: 

தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் உதயமாகியவுடன் பெரும் நிம்மதி கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணிகள் பாராட்டப்படும். உங்கள் செல்வாக்கும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்னும் 11 நாட்களே..செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News