செவ்வாய் மாற்றம்: இந்த ராசிகளுக்கு புத்தாண்டு குதூகலமாய் பிறக்கும், வெற்றிகள் குவியும்

Mars Transit: செவ்வாயின் ராசி மாற்றத்தால், யாருக்கு சுபமான பலன்கள் கிடைக்கவுள்ளன, யார் அசுப பலன்களால் அவதிக்கு ஆளாகப்போகிறார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2022, 06:05 PM IST
  • தனுசு ராசிக்கார்ரகளுக்கு செவ்வயின் மாற்றம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
  • இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் சூரியனைப் போல பிரகாசிக்கும்.
  • வருமான வழிகள் அதிகரிக்கும்.
செவ்வாய் மாற்றம்: இந்த ராசிகளுக்கு புத்தாண்டு குதூகலமாய் பிறக்கும், வெற்றிகள் குவியும் title=

செவ்வாய் பெயர்ச்சி நவம்பர் 2022: ஜோதிடத்தில், செவ்வாய் கிரகம், தைரியம், வலிமை, சக்தி போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ராசிகளின் நிலை மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. நவம்பர் 13ம் தேதி இரவு 8.38 மணிக்கு செவ்வாய் ரிஷப ராசியில் பிரவேசித்துள்ளார். மார்ச் 13 வரை இந்த ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ரிஷப ராசியில் செவ்வாய் இருப்பது பல ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். செவ்வாயின் ராசி மாற்றத்தால், யாருக்கு சுபமான பலன்கள் கிடைக்கவுள்ளன, யார் அசுப பலன்களால் அவதிக்கு ஆளாகப்போகிறார்கள் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேஷம்
செவ்வாய் மேஷ ராசியின் இரண்டாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். அதன் கலவையான விளைவு மேஷ ராசியில் இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சிக்கிய பணத்தை மீட்க முடியும். 

மேஷம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இல்லை. பண இழப்பை சந்திக்க நேரிடலாம்.

மிதுனம்
இந்த காலகட்டத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருக்கவும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கடன் வாங்கும் நிலைக்கு வரலாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரத்தால் வருமானம் பெருகும் வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் உணர்ச்சிவசப்படாமல் கவனமாக சிந்தித்து முடிவெடுக்கவும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். 

சிம்மம்
இந்த பெயர்ச்சி சிம்ம ராசியின் 10வது வீட்டில் நடந்துள்ளது. இதன் விளைவால் சுப பலன்கள் கிடைக்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும். 

கன்னி
பணியிடத்தில் கவனமாக இருக்கவும். நீங்கள் முன்னேற்றம் அடையலாம். பணியிடத்தில் கலவையான முடிவுகளைக் காண்பீர்கள். பணிகளில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். ஆனால் இந்த நேரத்தில் கவலைப்பட வேண்டாம். இறுதியில் வெற்றியே கிட்டும். மாணவர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

மேலும் படிக்க | Saturn Transit 2023: சனியின் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு அசத்தலான ராஜயோகம், தொட்டது துலங்கும் 

துலாம்

இந்த பெயர்ச்சி துலாம் ராசியின் எட்டாம் வீட்டில் நடக்கப் போகிறது. இது துலா ராசிக்கு அசுப பலன்களைத் தரும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். வாகனத்தைப் பயன்படுத்தும் போது சிறப்பு கவனம் செலுத்துங்கள். அதே சமயம் பணம் விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. 

விருச்சிகம்
செவ்வாய் விருச்சிக ராசியின் ஏழாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். தொழிலதிபர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சொத்து, நிலம் வாங்கும் வாய்ப்பு உண்டு.

தனுசு
தனுசு ராசிக்கார்ரகளுக்கு செவ்வயின் மாற்றம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் சூரியனைப் போல பிரகாசிக்கும். அதிக செலவுகள் காரணமாக நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வருமான வழிகள் அதிகரிக்கும்.

மகரம் 

செவ்வாய் மகர ராசிக்காரர்களின் ஐந்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் நல்லது. பிள்ளைகள் தொடர்பான செய்திகளால் பதற்றம் ஏற்படும். 

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். உறவினர் மூலம் விரும்பத்தகாத செய்திகள் வர வாய்ப்புள்ளது. எச்சரிக்கையுடன் பயணம் செய்யுங்கள். பெற்றோரின் எச்சரிக்கையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

மீனம் 

மீன ராசியின் மூன்றாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் தைரியம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவுகளுக்கு சிறப்பு கவனம் தேவை. இந்த காலத்தில் உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க | விருச்சிகத்தில் 'சதுர்கிரஹி யோகம்'; பண மழையில் நனையும் ‘3’ ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News