டிசம்பர் மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்: அவ்வப்போது கிரகங்களின் பெயர்ச்சி அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்த டிசம்பர் மாதத்தில் மூன்று கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டு பரிவர்த்தனை ஆகின்றன. டிசம்பர் 3 ஆம் தேதி, புதன் கிரகம் தனுசு ராசிக்குள் நுழைந்தது. மேலும் சுக்கிரனும் தனுசு ராசியில் சஞ்சரித்துள்ளார். டிசம்பர் 16ம் தேதி சூரியனும், டிசம்பர் 28ம் தேதி புதனும், மகர ராசியில் சஞ்சரிக்கிறார்கள். டிசம்பர் 29ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியிலும், புதன் டிசம்பர் 31ஆம் தேதி வக்ர நிலையில் தனுசு ராசியிலும் பிரவேசிக்கிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அசுபமான பலன்கள் ஏற்படும்.
கிரகக் கோளாறுகளை நீக்க பரிகாரங்களும் உண்டு. ஆனால், ஆபத்து யாருக்கு என்று தெரிந்துக் கொண்டால், அதிலிருந்து விடுபட உபாயங்களை செய்யலாம் என்பதால், இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு எதிர்கொள்ளுங்கள்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு டிசம்பரில் நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் சற்று கடினமானதாக இருக்கும். டிசம்பரில் உள்ள கிரகங்களின் நிலையினால், வேலை செய்பவர்களுக்கு அசுபமான செய்திகள் வந்து சேரலாம். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், அடுத்த மாதம் வரைத் தள்ளிப்போடவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பதும், அனைவரும் ஆதாரவாகவும், அனுசரனையாகவும் இருப்பார்கள் என்பது உங்களுக்கு பலத்தைக் கொடுக்கும்.
கடகம்: டிசம்பர் மாதம் கடக ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. இந்த ராசிக்காரர்களுக்குத் தொழில் துறை, வியாபாரம் போன்றவற்றில் சற்று பின்னடைவு ஏற்படலாம். சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். புதிய வேலை வாய்ப்புகள் வந்தால், அதை கவனத்துடன் பரிசீலிக்கவும். சாதகமும், பாதகமும் கலந்து இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருந்தால், பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | Astro: கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா... சில எளிய ஜோதிட பரிகாரங்கள்!
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் பல தடைகளை ஏற்படுத்தும். தடைப்பட்ட வேலைகளை நினைத்துக் கவலைப்படாமல் இருக்கலாம். ஏனெனில் இந்த மாதம் கடந்துவிட்டால், அடுத்த மாதம், அதாவது புத்தாண்டிலேயே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் கிரகங்கள் பெயர்ச்சி அடைகின்றன. அடுத்த மாதம் முதல் தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சொன்னாலும், திடீர் செலவுகளும், செலவுகள் ஏற்படுத்தும் கவலையும் மனதை வாட்டு.
மகரம்: டிசம்பர் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு மனதில் கவலைகள் அதிகரிக்கும். தொழிலில் கவனம் செலுத்தவும். தடைபட்ட பணிகளை முடிக்க இன்னும் காலம் வரவில்லை. பணப் பிரச்சனை அதிகரிக்காது என்றாலும், செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே கனிவாக நடந்துக் கொள்லவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sun transit: பொங்கலை பொங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாட சூரியப் பெயர்ச்சி பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ