ராசி மாறினார் சூரியன்: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம், அமோகமாக வாழ்வார்கள்

Sun Transit: சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் நல்ல பலன்களை அள்ளித் தரவுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 17, 2022, 12:43 PM IST
  • சூரியனின் ராசி மாற்றம் விருச்சிக ராசியில் நடந்திருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்குப் பலன்கள் அதிகமாக இருக்கும்.
  • விருச்சிக ராசியில் சூரியனின் சஞ்சாரம் இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றியைத் தரும்.
  • பணி இடத்திலும் குடும்பத்திலும் மரியாதை அதிகரிக்கும்.
ராசி மாறினார் சூரியன்: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம், அமோகமாக வாழ்வார்கள்  title=

சூரியன் ராசி மாற்றம்: ஜோதிட சாஸ்திரத்தில், சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியன் கிரகம் வெற்றி, மரியாதை, தந்தை பாசம், சகோதர பாசம், ஆன்மா, தைரியம் மற்றும் துணிவு ஆகியவற்றின் காரணியாக உள்ளது. பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சூரியன் தனது ராசியை மாற்றும்போதும், அது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நேற்று அதாவது நவம்பர் 16ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியடைந்து விருச்சிக ராசியில் பிரவேசித்தார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் நல்ல பலன்களை அள்ளித் தரவுள்ளது. 

இனி, டிசம்பர் 16, 2022 வரை, சூரியன் இந்த ராசியில் இருப்பார். சூரியனின் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு சூரிய சஞ்சாரம் மிகவும் சாதகமாக உள்ளது

சிம்மம்:

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். அத்தகைய சூழ்நிலையில், சூரியனின் ராசி மாற்றத்தின் அதிகபட்ச விளைவு இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். விருச்சிக ராசியில் பிரவேசித்த சூரியன் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிப்பார். சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இது இருக்கும். வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | ஞானக்காரகரின் அருளால் அருமையான வாழ்க்கை அமையப்போகும் 3 ராசிக்காரர்கள் 

விருச்சிகம்:

சூரியனின் ராசி மாற்றம் விருச்சிக ராசியில் நடந்திருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்குப் பலன்கள் அதிகமாக இருக்கும். விருச்சிக ராசியில் சூரியனின் சஞ்சாரம் இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றியைத் தரும். பணி இடத்திலும் குடும்பத்திலும் மரியாதை அதிகரிக்கும். பணப் பலன்கள் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

சூரியனின் ராசி மாற்றம் கும்ப ராசியினருக்கும் சுபமாக அமையும். பண வரவு அனுகூலமாக இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். இந்த காலத்தில் துவங்கப்படும் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன் / மனைவி குழந்தைகள் இடையே அன்பு அதிகரிக்கும். கல்வியுடன் தொடர்புடையவர்கள் பெரும் பயனடையலாம். நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும். மகிழ்ச்சி பொங்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 21 நாட்களில் உங்கள் தலைவிதியை மாற்ற தனது ராசியை மாற்றும் புதனின் சஞ்சாரம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News