கன்னிக்கு மாறும் புதன்! பத்ர ராஜயோகத்தால் அமோகமாய் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்!

Mercury transit Bhadra Rajyoga: பத்ர ராஜயோகத்தை உருவாக்கும் புதன் அற்புதங்களைச் செய்வார், சில ராசிக்காரர்களின் தொழிலில் ஏற்றம் தந்தால் பலருக்கு வேலையில் முன்னேற்றத்தைத் தருவார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 14, 2024, 08:36 PM IST
  • பத்ர ராஜயோகத்தை உருவாக்கும் புதன்
  • தொழிலில் ஏற்றம் தரும் பத்ர யோகம்
  • வேலையில் முன்னேற்றத்தைத் தரும் புதன் பெயர்ச்சி
கன்னிக்கு மாறும் புதன்! பத்ர ராஜயோகத்தால் அமோகமாய் வாழப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்! title=

பத்ர ராஜயோகம்: வேலை, வியாபாரம், தொழில் பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்திற்கு காரணகர்த்தாவான புதன் பகவான், தற்போது பெயர்ச்சியாகப் போகிறார். கிரகப் பரிமாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால், அவை மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. நவகிரகங்களும், நமது வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான நிகழ்வுகள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கிரகங்களில் புத்திக்கு அதிபதியான புதனின் சஞ்சாரம், பத்ர ராஜயோகத்தை உருவாக்கும், இது தொழிலில் ஏற்றம் தரும். புதன் யாருடைய அதிர்ஷ்டத்தை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

செப்டம்பர் மாதத்தில் புதன் இரண்டு முறை சஞ்சாரத்தை மாற்றுகிறார். முதலில் சிம்ம ராசிக்கு பெயரும் புதன், பிறகு கன்னி ராசியில் நுழைவார். கன்னி ராசியில் புதன் சஞ்சாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், தனது சொந்த ராசியான கன்னியில் சஞ்சரிக்கும் காலம் என்பது பத்ர ராஜயோகத்தை உருவாக்கும்.  

மேலும் படிக்க | Saturn transit in Poorattathi: இன்னும் 7 நாட்களில் சனி பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம்,

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகம் சிறப்பான பலன்களைத் தரும். ஆளுமைத்திறனை மேம்படுத்து புதன், தனது சொந்த ராசியான கன்னி ராசியில் இருப்பது பெரும் வெற்றியைத் தரும். மரியாதை அதிகரிக்கும், பண வரவு எதிர்பாராத மகிழ்ச்சியைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு மணமாலை கைகூடும். திருமணமானவர்களுக்கு தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகம் பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். உங்கள் சொல்லாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தினால் வேலை கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.  

மேலும் படிக்க | Venus Nakshatra Transit In Kanni: இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜாதி ராஜ பொற்காலம், நல்ல அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகம் அதிர்ஷ்டத்தைத் தரும். தொழில் செய்பவர்கள் அதிக லாபம் அடைவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கும் அருமையான காலம் இது. உத்தியோகத்தில் உயர்வு, பதவி உயர்வு என அந்தஸ்து உயரும். வியாபாரிகள் பெரும் லாபத்தைப் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News