இன்று சனி அமாவாசை: இந்த 5 ராசிகள் கவனமாக இருக்கனும்

Shani Amavasya 2022: சனி அமாவாசை நாளில், சனி பகவான் 5 ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 27, 2022, 08:38 AM IST
  • சனி அமாவாசை 2022
  • சனி பகவானின் தாகத்தை தவிர்க்க பரிகாரங்கள்
  • சனி அமாவாசை 2022 பரிகாரங்கள்
இன்று சனி அமாவாசை: இந்த 5 ராசிகள் கவனமாக இருக்கனும் title=

சனி அமாவாசை 2022 பரிகாரங்கள்: இந்து பஞ்சாங்கத்தின்படி, இன்று (ஆகஸ்ட் 27) சனி அமாவாசை ஆகும். உண்மையில் இன்று ஆவணி மாத அமாவாசை மற்றும் அது சனிக்கிழமையில் வருகிறது, எனவே இது சனிஅமாவாசை என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சனிக்கிழமை சனிபகவானுக்குரிய நாளாகக் கருதப்படுகிறது. அந்தவகையில் இந்த நேரத்தில் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்கள் கர்மவினை அளிப்பவரான சனிபகவான் மீது வக்ர கண்ணை வைத்துள்ளனர். சனிபகவானின் கோபத்தை நீங்கள் தவிர்க்க விரும்பினால், இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம்.

சனியின் தாக்கம் இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும்
இந்த நேரத்தில் சனி பகவான் மகர ராசியில் இருக்கிறார் மற்றும் அவரது நிலை பின்னோக்கி செல்கிறது. தற்போது கும்பம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடந்து கொண்டிருக்கிறது. இது தவிர மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனி தசையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சனிபகவானின் அருள் கிடைக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக இந்த வழிமுறைகளை செய்யுங்கள்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

சனிபகவானின் அருள் பெற பரிகாரம்
சனி அமாவாசையன்று ஆசி பெற, காலையில் குளித்துவிட்டு, சனி பகவான் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள அவருக்கு கடுகு எண்ணெயை சமர்பிக்கவும். பிறகு சனி பகவானை வழிபடுங்கள். கோவிலில் சனி சாலிசாவையும் பாராயணம் செய்யலாம்.

* சனி அமாவாசை அன்று சூரியன் மறைந்ததும் அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும். இதன் மூலம் சனிபகவானின் அருள் கிடைக்கும்.

* சனிபகவானின் அருளைப் பெற சனி அமாவாசை அன்று இரும்புப் பொருட்கள், கடுகு எண்ணெய், கருப்பட்டி, உளுத்தம் பருப்பு, காலணிகள் மற்றும் செருப்புகளை தானமாக வழங்கலாம். 

* சனிக்கிழமையன்று சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதன் மூலம் சனி தோஷத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. அதேபோல் சனிபகவானின் அருள் கிடைக்கும்.

* சனி அமாவாசை அன்று, கோவிலிலோ அல்லது திறந்த வெளியிலோ அரச மர கன்றை நடவும். இவ்வாறு செய்வதால் சனிதேவரின் மனம் மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது. அரச மரக் கன்றை நடுவதன் மூலம் ஜாதகத்தில் உள்ள சனி தோஷங்களும் நீங்கும்.

* சனி அமாவாசை நாளில், நாய்க்கு உணவு கொடுக்க வேண்டும். மேலும், எண்ணெயில் முகம் பார்த்த பிறகு, அதை தானம் செய்யலாம். சனி பகவான் சனி அமாவாசை நாளில் தேவைப்படும் ஒருவருக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சியடைந்து, ஆசிகளை வழங்குகிறார் என ஆன்மீக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News