வக்ரமாகும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் அதிகமாகும்.. நஷ்டம் வந்து சேரும்

Venus Retrograde: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இதன் விளைவால் 4 ராசிகளின் மீது பிரச்சனை மேகங்களாக சூழ உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 18, 2023, 02:35 PM IST
  • சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
  • குடும்பத்தின் தேவைகள் அதிகரித்து அவற்றை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படக்கூடும்.
  • அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும்.
வக்ரமாகும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் அதிகமாகும்.. நஷ்டம் வந்து சேரும் title=

சுக்கிரன் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத சாஸ்திரங்களில், சுக்கிரன் கிரகம் அழகு மற்றும் மகிழ்ச்சியின் அம்சமாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில், சுக்கிரன் அனைத்து கிரகங்களையும் விட மிகவும் பிரகாசமான மற்றும் பெண் அம்ச கிரகமாக பார்க்கப்படுகின்றது. ஜூலை 23, 2023 அன்று, சுக்கிரன் கிரகம் தனது எதிரி கிரகமான சூரியனின் ராசி சிம்மத்தில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளது. 

ஒரு கிரகம் தனது வழக்கமான இயக்கத்திலிருந்து மாறி எதிர் திசையில் இயங்கும் நிலையை வக்ர நிலை என்று கூறுகிறோம். அனைத்து கிரகங்களின் வக்ர இயக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இதன் விளைவால் 4 ராசிகளின் மீது பிரச்சனை மேகங்களாக சூழ உள்ளன. ஒரு மாதத்திற்கு அவர்களது வாழ்க்கையில் பல சங்கடங்கள் ஏற்படும். மேலும் வீட்டில் சேமிக்கப்பட்ட தொகை அனைத்தும் செலவழிக்கப்படும். ஒரு குடும்ப உறுப்பினர் கடுமையான நோய்வாய்ப்படும் அபாயமும் உள்ளது. இருப்பினும், அவர்கள் சில சிறப்பு நிவாரணங்களை செய்தால் சுக்கிரன் வக்ர பெயர்ச்சியின் இந்த பக்க விளைவுகளை தவிர்க்கலாம். அந்த 4 ராசிகள் எவை, பிரச்சனைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும் அன்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் பிரச்சனைகளை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் வருமானத்துடன் ஒப்பிடுகையில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்க நேரிடும் வாய்ப்பு உள்ளது. சிம்மத்தில் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி வணிகர்களுக்கு சாதகமாகத் தெரியவில்லை. இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். வியாபாரத்தில் கடும் போட்டியை சந்திக்க நேரிடலாம். 

பரிகாரம்

மேஷ ராசிக்காரர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிரன் கிரகத்திற்கான ஸ்ஹோத்திரங்களை சொல்வதும் துர்கை அம்மனை வழிபடுவதும் நல்லது. 

கடக ராசி

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தின் தேவைகள் அதிகரித்து அவற்றை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்கள் பணிகளை மிக நன்றாக செய்தாலும், உங்களுக்கு பாராட்டு கிடைக்காது. அதனால் நீங்கள் அதிருப்தி அடையலாம். பழைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதால், வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். புதிய தொழில்நுட்பத்திற்கு உங்களை பழகிக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியுடன் உங்களுக்கு தகராறு ஏற்படக்கூடும். எனினும், அவருடன் அமர்ந்து பேசினால், பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். 

பரிகாரம்:

செவ்வாய்கிழமைகளில் கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது தவிர முருகன் கோயில்களுக்கு சென்று முருகரை வழிபட வேண்டும். மேலும் துர்க்கை அம்மனையும் வழிபட வேண்டும். 

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. நவம்பர் முதம் அனைத்திலும் நம்பர் 1

கன்னி ராசி

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் கலவையான பலன்களை அளிக்கும். உங்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதனுடன், பற்களில் ஏற்படும் வலி மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சனைகளும் உங்களை படுத்தலாம். வெளியில் இருந்து பொரித்த மற்றும் குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். புதிய இடங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும், நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும், எனவே சேமிப்பது கடினமாக இருக்கும். வாக்குவாதம் காரணமாக, வீட்டின் சூழ்நிலை மோசமடையலாம். 

பரிகாரம்
இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் முருகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடவும். 

விருச்சிக ராசி

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி காரணமாக உங்கள் தொழிலில் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம் ஏற்படக்கூடும். இதன் காரணமாக நீங்கள் சில சிக்கல்களையும் அலைச்சல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். திடீரென்று முன்னர் திட்டமிடாத செலவுகள் உங்க முன் வரும். இதன் காரணமாக, உங்கள் பட்ஜெட் முழுவதும் மோசமாகிவிடும். பெற்றோருடன் ஏதாவது தகராறு ஏற்படலாம். வீட்டிலுள்ள இந்த முரண்பாடு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும். நீங்கள் மன அழுத்தத்தை உணருவீர்கள்.

பரிகாரம்
தினமும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து சூரிய பகவானை அழிபடுவது நல்ல பலனை தரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மீனத்தில் குரு: இன்னும் 2 மாதத்தில் இந்த 3 ராசிக்கு தொழிலில் பணம் கொட்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News