Diwali Lucky Dress Code | தீபாவளி கொண்டாட்டம் தொடங்கிருச்சு. புது உடைகளை எடுக்க குடும்பம் குடும்பமாக மக்கள் துணிக்கடை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கலர் உடை அணிய வேண்டும் என சொல்லபட்டிருக்கிறது. சில ராசிகளுக்கு ஆகாத கலர்களும் இருக்கின்றன. அந்த உடைகளை அணிந்தால் அவர்களுக்கு நல்ல நாட்களாக இருந்தால் கூட கெட்ட நாளாக மாறிடும். அதனால், இந்த தீபாவளி உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்க, உங்கள் ராசிக்கு உகந்த கலரில் உடையை வாங்கி அணியுங்கள். எந்த ராசிக்கு என்ன கலர் உடை அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
தீபாவளி ஆடை டிப்ஸ் : எந்த ராசி என்ன கலர் உடை அணியலாம்?
மேஷம்: தீபாவளி அன்று லக்ஷ்மி பூஜையின் போது சிவப்பு அல்லது அதனை ஒத்த லைட் கலர் ஆடைகளை தேர்வு செய்து அணியுங்கள். இந்த நிறம் லட்சுமி அம்பாளின் ஆசீர்வாதங்களை பெற்று கொடுக்கும்.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த தீபாவளியன்று லட்சுமி பூஜைக்கு, தெய்வத்தின் ஆசீர்வாதத்தை வேண்டி நீல நிறத்தில் ஆடை அணியுங்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் ஆரஞ்சு நிறத்தில் தீபாவளி அன்று உடை அணிவது நல்லது.
கடகம்: கடக ராசிக்காரர்கள் தீபாவளியின் போது பச்சை நிறத்தை தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில் இது இந்த ராசிக்கு மிகவும் மங்களகரமான நிறமாக கருதப்படுகிறது.
சிம்மம்: தீபாவளி கொண்டாட்டத்தை சிறப்பாகப் இருக்க பழுப்பு நிற ஆடைகளை அணியுங்கள்.
கன்னி: தீபாவளியன்று கன்னி ராசியினருக்கு வெள்ளை நிறம் சக்தி வாய்ந்தது, நிதி ஆதாயங்களை ஈர்க்கும். உங்களிடம் முழு வெள்ளை ஆடை இல்லையென்றால், முடிந்தவரை வெள்ளை நிறம் கொண்ட உடையை அணியலாம்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள், தீபாவளி பூஜையின் போது, செழிப்பை வரவேற்கவும், நிதி இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும் மஞ்சள் அல்லது அதனை ஒத்த நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் லட்சுமி பூஜைக்கு மெரூன் கலர் உடைகளை தேர்வு செய்து அணிவது நல்லது.
தனுசு: தீபாவளியின் போது தனுசு ராசிக்காரர்களுக்கு ஊதா நிற ஆடைகளை அணியுங்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும்.
மகரம்: லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக நம்பப்படும் நீல நிறத்தை அணிவதன் மூலம் மகர ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும்.
கும்பம்: தீபாவளியன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சாம்பல் ஒரு சிறந்த தேர்வாகும். மகிழ்ச்சி மற்றும் வெற்றியுடன் லக்ஷ்மியின் ஆசீர்வாதங்களையும் ஈர்க்கிறது.
மீனம்: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு லட்சுமி தேவியின் ஆசியைப் பெற நீங்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடையை அணிய வேண்டும்.
மேலும் படிக்க | துர்மரணத்தைத் தவிர்க்க எமனுக்கு மாவிளக்கு! தந்தேரஸ் நாளில் எம தீபம் ஏற்றினால் மரணபயம் இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ