ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.. பொற்காலம் ஆரம்பம்

Rahu Peyarchi: ராகு பெயர்ச்சி ஆனவுடன் அக்டோபர் 30ஆம் தேதியுடன் குரு சண்டாள யோகம் முடிவடைகிறது. இது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 15, 2023, 02:19 PM IST
  • விருச்சிக ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம் வளரும்.
  • நீங்கள் மனதளவில் மிகவும் சமநிலையுடன் இருக்க வேண்டும்.
  • ராகுவின் மாற்றம் உங்களைக் குழப்பலாம்.
ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.. பொற்காலம் ஆரம்பம் title=

ராகு கேது பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், ராகு மற்றும் கேது இரண்டும் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக இந்த கிரகங்களின் பெயர்களை கேட்டாலே மக்கள் அச்சப்படுவது உண்டு. ராகுவும் கேதுவும் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசி மாறுகிறார்கள். தற்போது, ​​ராகு மேஷ ராசியில் உள்ளார். ராகு 30 அக்டோபர் 2023 அன்று மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். 

ராகு பெயர்ச்சி ஆனவுடன் அக்டோபர் 30ஆம் தேதியுடன் குரு சண்டாள யோகம் முடிவடைகிறது. இது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். ராகு-கேதுவின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும். இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மேஷ ராசி (Aries)

குரு சண்டாள யோகம் முடிந்த பிறகு மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இதனுடன், உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். இது தவிர குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும்.

ரிஷப ராசி (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் நிதி நிலைமை சீராக இருக்கும். முதலீடுகளில் லாபமும், செல்வச் சேர்க்கையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மேலும் இதில் வெற்றியும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளும் இந்த நேரத்தில் வெற்றிகரமாக முடிவடையும். ராகுவின் சுப தாக்கத்தால் உங்கள் முன் உள்ள சவால்கள் குறையும்.

மேலும் படிக்க | சனி உச்சம் செல்கிறார்.. இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம், கோடீஸ்வர யோகம்

கன்னி ராசி (Virgo)

மீன ராசியில் ராகு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், எதிர்பாராத நிதி ஆதாயம் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளையும் இந்த நேரத்தில் பெறக்கூடும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்கள், கூட்டாண்மையில் வேலை செய்துகொண்டிருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும். 

துலா ராசி (Libra) 

துலா ராசிக்காரர்களுக்கு இது நல்ல தொடக்கமாக இருக்கும். அலுவலக வேலை செய்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். அதே சமயம் விளையாட்டு சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில், தேவையில்லாமல் யாரிடமும் வாக்குவாதம் செய்யவோ, கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போடவோ வேண்டாம். 

விருச்சிக ராசி (Scorpio) 

விருச்சிக ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம் வளரும். நீங்கள் மனதளவில் மிகவும் சமநிலையுடன் இருக்க வேண்டும். ராகுவின் மாற்றம் உங்களைக் குழப்பலாம். எனினும் நன்றாக யோசித்து நல்ல முடிவையே எடுப்பீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள். வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்கள் இப்போது செல்லக்கூடும். இதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | 100 ஆண்டுக்குப் பிறகு அபூர்வ நிகழ்வு, சனி அமாவாசை சூரிய கிரகணத்தால் இந்த ராசிகளுக்கு கோடிஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News