சனியின் அருளால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?

Sani Vakra Nivarthi: இந்த பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு எதிர்பாராத பண வரவின் பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 8, 2023, 08:56 PM IST
  • துலா ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி அதிகப்படியான நற்பலன்களைத் தரும்.
  • இவர்களின் பொருளாதார நிலையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
  • இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும்.
சனியின் அருளால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன? title=

சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: நீதியின் கடவுள் என அழைக்கப்படும் சனி பகவான் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னர் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். தீபாவளிக்கு முன்னர் சனியின் இந்த மாற்றம் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி பகவான் நவம்பர் 4 ஆம் தேதி மதியம் 12:35 மணிக்கு தனது இயக்கத்தை மாற்றி வக்ர நிவர்த்தி அடைந்தார். இதாற்கு பிறகு சனி பகவான் மீண்டும் அடுத்த ஆண்டு அதாவது 2024 இல், ஜூன் 29 அன்று வக்ர பெயர்ச்சி அடைந்து நவம்பர் 15, 2024 அன்று வக்ர நிவர்த்தி அடைவார். 2024 ஆம் ஆண்டு முழுதும் கும்ப ராசியில் இருக்கப்போகும் சனி பகவான் மார்ச் 29, 2025 அன்று மீன ராசியில் நுழைவார். 

சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், இந்த பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு எதிர்பாராத பண வரவின் பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் அற்புதமாய் இருக்கும். வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படும். 

சனி வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நன்மைகளை பெறப்போகும் ராசிகளை பற்றி இங்கே காணலாம்

மேஷ ராசி (Aries)

சனி வக்ர நிவர்த்தி மெஷ ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மன அழுத்தத்தை சந்திக்க வேண்டி வரும். மூத்த குடும்ப உறுப்பினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் பொறுமையாக அமர்ந்து பேசினால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வருமான ஆதாரங்கள் தொடர்ந்து அதிகரிக்கும். இந்த காலத்தில் அனைத்து சிந்தனை உத்திகளையும் பின்பற்றுங்கள். பிள்ளைகளின் பொறுப்புகள் நிறைவேற்றப்படும். காதல் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

ரிஷப ராசி (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியால் கலவையான பலன்கள் கிடைக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம் இருக்கலாம். எனினும், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை செய்தால் பிரச்சனைகள் சரியாக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மத்திய, மாநில அரசுத் துறைகளில் வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எந்த வகையான அரசாங்க டெண்டருக்கு விண்ணப்பிக்க விரும்பினாலும், அல்லது தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்க விரும்பினாலும், அதை இப்போது செய்யலாம். சனி பகவானின் அருளால் இந்த காலத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். 

மேலும் படிக்க | அபூர்வ யோகம் ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு தீபாவளி முதல் வாழ்க்கை தித்திக்கும், 2024 அட்டகாசமாய் இருக்கும்

மிதுன ராசி (Gemini)

சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் காரணமாக பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்கார்ரகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். தொழில் ரீதியாக பல விருத்திகள் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

துலா ராசி (Libra):

துலா ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி அதிகப்படியான நற்பலன்களைத் தரும். இவர்களின் பொருளாதார நிலையில் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். புதிய வழிகளில் வருமானம் கிடைக்கும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு பொன்னான வாய்ப்பைப் பெறலாம், இது உங்களுக்கு ஒரு பெரிய பதவி, கௌரவம் மற்றும் பணத்தை கொண்டு வரும். உங்கள் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் நீங்கள் அதிக புகழ் பெறுவீர்கள். மதம் - ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு பிறகு வரும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், லாபமோ லாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News