ஐப்பசி 2022 மாத ராசிபலன்: சிம்மத்திற்கு ஏற்றம்! மீனத்திற்கு எச்சரிக்கை

Sun Transit Monthly Horoscope: சூரியனுடன் இந்த ஐப்பசி மாதம் வேறு சில கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கும்போது, அது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 18, 2022, 07:48 AM IST
  • ஐப்பசி 2022 மாத ராசிபலன்
  • சிம்மத்திற்கு ஏற்றம்!
  • மீனத்திற்கு எச்சரிக்கை
ஐப்பசி 2022 மாத ராசிபலன்: சிம்மத்திற்கு ஏற்றம்! மீனத்திற்கு எச்சரிக்கை title=

புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இந்த கணிப்புகளின் துணை கொண்டு, நமது வாழ்க்கையை திட்டமிட்டு செயல்பட்டால், வாழ்க்கை சுமூகமாக செல்லும். அக்டோபர் 18ம் தேதியான இன்று சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சென்றுவிட்டார். ஏற்கனவே துலாம் ராசியில் கேது சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல, சூரியனுடன் இந்த ஐப்பசி மாதம் வேறு சில கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கும்போது, அது உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்...

ஐப்பசி மாத கிரக பெயர்ச்சியின்போது கிரகங்கள் இருக்கும் நிலைகள்:
துலாம் ராசியில் சூரியன் 
மேஷ ராசியில் ராகு
மிதுன ராசியில் செவ்வாய்
மகர ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார்
மீன ராசியில் குரு
துலாம் ராசியில் கேது

மேலும் படிக்க | மிதுனம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை

இன்று முதல் ஒரு மாதத்திற்கு அதாவது, 18-10-2022 முதல் 16-11-2022 வரை, துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். நவக்கிரகங்களில் ராஜகிரகமாக கருதப்படும் சூரியன், சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசியில் நீசமடைகிறார். இந்த மாதம், 12 ராசிகளுக்குமான ராசிபலன்கள் இவை.

மேஷம்: உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கிரகங்கள் சாதமாக இருந்தாலும், சூரியன் ஏழாம் வீட்டில் இருப்பதால், குடும்பத்திலும், தொழில் மற்றும் பணியிடங்களிலும் விட்டுக் கொடுத்து போவது நலம். தேவையற்ற செலவுகளை தவிர்த்தால் மனதில் நிம்மதி இருக்கும். ஆனால், இந்த மாதம் சனி வக்கிர நிவர்த்தி அடைவது, சுப பலன்களைத் தரும்.

ரிஷபம்: ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ராசிக்கு அதிபதியான சுக்ரன் ஆட்சி பெற்று துலாம் ராசியில் அமர்வதால் நிம்மத்ஹி கிடைக்கும். கோபத்தையும், வார்த்தைகளையும்க் கட்டுப்படுத்தத் தெரிந்துக் கொள்வது அவசியம். உங்கள் ராசிக்கு நாலாம் வீட்டின் அதிபதியான சூரியன், ஆறாம் வீட்டில் ராஜ யோகம் பெறுவது நல்ல பலன்களைத் தரும். 

மிதுனம்: பொருளாதார நிலை உயரும் என்றாலும், ராசியிலேயே செவ்வாய் இருப்பதால் கவனம் தேவை. ராசியின் அதிபதியான புதன் நான்காம் வீட்டில் சுக்ரனோடு இணைந்திருப்பது சுப பலன்களைத் தரும்.சுப விரயம் ஏற்படும். அஷ்டம சனியாக, சனி வக்ர நிவர்த்தி அடைவதால், அஷ்டம சனியின் தாக்கத்தின் பாதிப்புகளை தவிர்க்க பரிகாரங்கள் செய்யவும்.

கடகம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்.பொருளாதார ஏற்றமும், செலவும் சமமாக இருக்கும். பொதுவாக இது உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும்.  

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

சிம்மம்: சிம்ம ராசிக்கு இந்தமாதம் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.  இட மாற்றம், வேலை மாற்றம், பயணங்கள் என பரபரப்பாக இருப்பீர்கள். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமாக அமையும்.  

கன்னி: பேச்சில் சாதுர்யம் அதிகரிக்கும், பண வரத்து இருக்கும். உங்கள் பேச்சு எடுபடும் காலம் இது. நிலுவைத்தொகைகள் வ்சௌஉலாகும். சுப காரியங்கள் நடப்பதால் சுபமாக செலவு செய்து மகிழுங்கள். 

துலாம்: உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் மாதம் இது. மாணவர்களுக்கு சாதகமான மாதம் இது.பொறுப்புகள் அதிகரிக்கும், முக்கியத்துவம் அதிகரிக்கும். சிந்தனைகள் தெளிவாகும். பல விதமான நன்மைகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் வேகமாக நடக்கும்.

விருச்சிகம்: உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் 4 கிரகங்கள் சஞ்சரிக்கும் இந்த ஐப்பசி மாதத்தில், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. சுப விரயங்களும் செலவுகளும் சமமாக இருக்கும். அவநம்பிக்கை கொள்வது நல்லது இல்லை என்றாலும், அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசாமல் இருப்பதும் நல்லது.

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

தனுசு: இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். பண வரவு, வணிகத்தில் லாபம் என்று நிதிநிலை மேம்படும். வேலை, வணிகம் மற்றும் தொழிலில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கி நிம்மதியாக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவியும் கிடைக்கும்.

மகரம்: வேலை சார்ந்த முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய வேலை அல்லது பதவி உயர்வு ஏற்படும் வாய்ப்பு உண்டு. நிதிநிலை மேம்படும், மனதில் நிம்மதி ஏற்படும்.  
 
கும்பம்: நன்றும் தீதும் கலந்தே இந்த மாத பலன்கள் இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். நிதி நிலைமையும் மேம்படும். குலதெய்வம் மற்றும் முன்னோர் வழிபாடு தடைகளை நீக்கும்.

மீனம்: மீன ராசிக்கு அஷ்டம வீடான துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. உடல் நல பாதிப்பு, தொழிலில் தடைஎன பல தடைகளை சந்திக்க நேரிடும். கவனமாக செயல்பட்டால் நிம்மதி கொஞ்சமாவது இருக்கும். சிவ வழிபாடு சிறந்த பரிகாரமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நவ பஞ்சம தோஷம் படுத்தும் பாடு! பாவம் இந்த 4 ராசிகள்: இது செவ்வாய்-கேது சேர்க்கை தோஷம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News