Ajith Kumar Daughter : அஜித் அழகில் பாதி..ஷாலினி அழகில் மீதி! அனௌஷ்காவின் வைரல் புகைப்படங்கள்

Ajith Kumar Daughter Photos : பிரபல நடிகர் அஜித் குமாரின் மகள் அனௌஷ்கா குமாரின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Ajith Kumar Daughter Photos : தமிழ் திரையுலகில், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித்குமார். தன்னுடன் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அஜித்-ஷாலினிக்கு அனௌஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். இதில், அனௌஷ்காவிற்கு தற்போது 16 வயது ஆகிறது. இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1 /8

தமிழ் திரையுலகின் பிரபல ஜோடிகளாக விளங்குபவர்கள் அஜித்குமார்-ஷாலினி. அமர்க்களம் படத்தில் ஒன்றாக நடித்த போது இவர்கள் இருவரும் காதல் கொண்டனர். பின்னர், 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

2 /8

ஷாலினி, அவர் நடித்து வந்த காலத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். இருப்பினும், திருமணம் செய்த பிறகு திரை வாழ்க்கையில் இருந்து விலகிக்கொண்டு குடும்பத்தை பார்த்து வருகிறார். 

3 /8

ஷாலினிக்கும் அஜித்திற்கும் 2 குழந்தைகள் உள்ளனர். அதில், முதல் குழந்தையின் பெயர் அனௌஷ்கா, இவருக்கு 16 வயதாகிறது. இரண்டாவதாக ஆத்விக் குமார் என்ற மகன் இருக்கிறார். 

4 /8

அஜித் குமாரின் மகள் அனௌஷ்காவின் சிறுவயது புகைப்படங்கள்தான் இதுவரை இணயதளத்தில் இருந்தன. ஆனால், அவர் வளர்ந்த பிறகு வெளியான புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியம் கொள்ள வைத்தது. 

5 /8

அனௌஷ்கா, எங்கு சென்றாலும் தனது தாய் அல்லது தந்தையுடனேயே செல்கிறார். ஷாலினியும், தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனது மகளை கூட்டிக்கொண்டுதான் செல்கிறார். 

6 /8

அனைத்து தந்தைகளையும் போலவே, அஜித் குமாரும் தனது மகள் அனௌஷ்காவை வெளியில் செல்கையில் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார். ஒருமுறை இவர்கள் குடும்பத்துடன் துபாய் சென்றிருந்த போது ஒருவர் அனௌஷ்காவை வீடியோ எடுத்து விட்டார். அதை பார்த்த அஜித், அவரது போனை வாங்கி அந்த வீடியோவை டெலிட் செய்தார். 

7 /8

அனௌஷ்கா, கேக்-பேக்கிங்கிள் ஆர்வமுடையவர் என்று கூறப்படுகிறது. இதற்காக இன்ஸ்டாகிராமில் தனியாக ஒரு பக்கத்தையும் வைத்திருக்கிறார். 

8 /8

அனௌஷ்காவை பார்ப்பதற்கு பாதி அஜித் போலவும் மீதி ஷாலினி போலவும் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.