பாலிவுட் முன்னணி நடிகர் அனுப்பம் கெர் நடிப்பில் உருவாகி வெளியாளவுள்ள 'The Accidental Prime Minister' திரைப்படத்திற்கு முதல் எதிர்ப்பு மகாராஷ்டிரா காங்கிரஸ் இளைஞர் அணியில் இருந்து எழுந்துள்ளது!
முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வை மையப்படுத்தி எழுத்தாளர் சஞ்சய் பரு எழுதிய புத்தகம் 'The Accidental Prime Minister'. இந்த புத்தக்கதினை மையப்படுத்தி அறிமுக இயக்குநர் விஜய் ரத்னகர் கொவ்டே அதே தலைப்பில் படம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
Maharashtra Youth Congress writes to makers of #TheAccidentalPrimeMinister & asks to show them the movie before release & if some scenes are found unfactual, they should be deleted else, Youth Congress will not let the movie be screened anywhere in the country. pic.twitter.com/CUGJ98hmv8
— ANI (@ANI) December 27, 2018
இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே, இத்திரைப்படத்தின் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த ட்ரைலருக்கான வரவேற்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் இளைஞர் அணியினர் இத்திரைப்படம் திரையிடலுக்கு முன்னர் தங்களுக்கு திரையிடப்படவேண்டும் என படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படத்தில் சர்ச்சைக்குறிய காட்சிகள் இருக்கும் பட்சத்தில் அதனை நீக்கி திரைப்படத்தினை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் ஜனவரி 11-ஆம் நாள் திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.