தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி மூணாறு (Munnar). 3 ஆறுகளின் சங்கமிக்கும் இடம் என்பதால் மூணாறு என அழைக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளை மூணாருக்கு அழைக்க கேரள சுற்றுலா பெர்னி சாண்டர்ஸை வைத்து மீம் உருவாக்கி, மூணாருக்கு (Munnar) மக்களை வரவேற்கிறது. இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகிறது. மூணாரின் புகைப்படத்துடன் பெர்னி சாண்டர்ஸின் புகைப்படம் வைத்து போட்டோஷாப் (Photoshop) செய்யப்பட்டுள்ளது.
Wear your warm woollen mittens and enjoy the cool crisp Munnar weather! #changeofair #keralatourism #BernieSanders pic.twitter.com/rnE8hWampK
— Kerala Tourism (@KeralaTourism) January 22, 2021
பெர்னி சாண்டர்ஸ் சமூக ஊடகங்களின் விருப்பமாக மாறியுள்ளது, இது கேரள சுற்றுலாவின் ட்விட்டர் பதிவில் (Twitter) இடம் பெற்றிருக்கும் புகைப்படம் மிகவும் அழகாக இருக்கிறது. புதன்கிழமை அமெரிக்க கேபிட்டலில் பதவியேற்பு நாளில், பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) தலைப்பு செய்திகளில் இடம்பெற்றார்.
விழாவில் கோட் சூட்டுடன் தலைவர்கள் பங்கேற்க, குளிர்காலத்தில் அணியும் சுவட்டர், முகக்கவசம், துணியால் நெய்யப்பட்ட கையுறை என வித்தியாசமான கெட்டப்புடன் வருகை புரிந்தார் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகளில் ஒருவரான பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders).
Also Read | காயப்பட்ட யானையை தீ வைத்து துரத்திய கொடூரம், நெஞ்சை பதறவைக்கும் video
இது விழாவில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது, கால் மேல் கால் போட்டு அமர்ந்தவாறு அவர் விழாவை ரசித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதை வைத்து பலரும் மீம்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கேரள சுற்றுலாத்துறை (Kerala Tourism),ஒரு பெர்னி சாண்டர்ஸ் மூணார் பகுதியில் அமர்ந்து ரசிப்பது போன்ற மீம்ஸை டிவிட்டரில் வெளியிட்டது.
"உங்கள் சூடான கம்பளி கையுறைகளை அணிந்து, குளிர்ந்த மிருதுவான மூணாரில் வானிலையை அனுபவிக்கவும்" என்று கேரள சுற்றுலா அநத புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைவாசஸ்தலம் மூணார். கேரள சுற்றுலாத்துறை மட்டுமல்ல, நடிகை தீபிகா படுகோனேவும், பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) உடன் தான் இருப்பது போல் மீம் ஒன்றை உருவாக்கி அதை இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.
Also Read | Pune: குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து, காரணம் என்ன?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR