என்னை அனுப்பாதீங்க... தோளில் சாய்ந்து அழும் ஆடு; கண் கலங்க வைக்கும் வீடியோ

பக்ரீத் பண்டிகை அன்று ஆடுகள் பலி கொடுப்பது முக்கிய வழக்கமாக உள்ள நிலையில்,  ஆட்டு சந்தைகளில் சில தினங்களுக்கு முன்பாக ஆடு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 12, 2022, 02:51 PM IST
  • ஆடுகளின் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் என்ற அளவில் விற்பனை ஆனது.
  • மனதை உருக்கும் வீடியோ உங்கள் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும்.
என்னை அனுப்பாதீங்க... தோளில் சாய்ந்து அழும் ஆடு; கண் கலங்க வைக்கும் வீடியோ title=

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும், ஈகை திருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான நபிகளாரின் தியாகத்தை போற்றி நினை கூறும் விதமாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலி கொடுத்தும், இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். பலியிட்ட பின், அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு வழங்குவார்கள். மற்றொரு பங்கை ஏழைகளுக்கு அளிப்பார்கள். மூன்றாவது பங்கை தங்களுக்காக பயன்படுத்துவார்கள்.

பக்ரீத் பண்டிகை அன்று ஆடுகள் பலி கொடுப்பது முக்கிய வழக்கமாக உள்ள நிலையில்,  ஆட்டு சந்தைகளில் பக்ரீத் தினத்திற்கு சில நாட்களாக ஆடு விற்பனை மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஆடுகள் கோடிக் கண்ககான ரூபாய்க்கு விற்பனையாகின.

ஆடுகளின் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு ரூ.5 ஆயிரம்  என்ற அளவில் விற்பனை ஆனது.  மகாராஷ்டிரா மாநிலம் கவுசர்பாக் என்ற சந்தையில் ஒரு ஆடு ரூ.8 லட்சத்திற்கு விற்பனையானது. ஆட்டுக்குட்டி ரூ.500 முதல் விற்பனையானது. ஆடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர்.

இந்நிலையில், பலியிடுவதற்காக வாங்கப்பட்ட ஆடு ஒன்று தனது  உரிமையாளரின் தோளில் சாய்ந்து கொண்டு அழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மனதை உருக்கும் அந்த வீடியோ உங்கள் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும். 

மேலும் படிக்க |  Viral Video: ஒரு ஆட்டோவில் 27 பயணிகள்; அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்

வைரலான வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோவை பார்க்கும் போது, ஆடு தன்னை பலி கொடுக்க வாங்குகிறார்கள் என்பதை உணர்ந்து அழுவதைப் போல் தோன்றுகிறது. அதன் உரிமையாளர் அதனை என்ன செய்தார். விற்று விட்டாரா; அல்லது விற்காமல் தனது வீட்டிற்கு அழைத்து சென்றாரா என்பது தெரியவில்லை.

மேலும் படிக்க | Viral Video: நாகப்பாம்பை கடித்து குதறும் கீரி; மனம் பதற வைக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News