Viral Video: உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள கங்கா காட் கால்வாயில் இருந்து கடந்த புதன்கிழமையன்று ஒரு முதலை வெளியே வந்துள்ளது. இது அந்த பகுதியில் வசிப்பர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போது வெளியான தகவலின்படி, கிட்டத்தட்ட 10-அடி நீளம் கொண்ட இந்த முதலை நரௌரா பகுதியில் உள்ள நடைபாதையில் கேட்டின் மீது ஏற முயற்சிப்பதை வெளியான வீடியோவின் மூலம் காண முடிகிறது. மீண்டும் தண்ணீருக்குள் செல்ல தன்னால் முடிந்த முயற்சிகளை அந்த முதலை செய்கிறது.
மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!
இப்படி ஒரு ராட்சத முதலையை திடீர் என்று பார்த்ததும் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் சூழ்ந்துள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு வனத்துறை அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் தகவலை தெரிவித்துள்ளனர். உபியில் உள்ள கங்கா காட் கால்வாய் அருகே உள்ள நடைபாதையில் முதலை வந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் முதலையை பிடித்து மீண்டும் கால்வாயில் விட்டனர்.
A mammoth crocodile came out of the water (Ganga canal) in Naraura of Bulandshahr district.
Forest rangers have rescued it and released it back in the canal. https://t.co/8J2ztjzucO pic.twitter.com/aU7tUP0saU
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) May 29, 2024
பொதுவாக முதலைகள் தண்ணீருக்குள் இருக்கும் வரை ஆபத்தானவை இல்லை என்றும், தண்ணீரை விட்டு வெளியே வந்தால் ஆபத்தானவை என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை முதலையை கண்டால் அவற்றை நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதம், பீகார் மாநிலத்தில் 14 வயது சிறுவன் முதலையால் கொல்லப்பட்டார்.
பிறகு அந்த ஊர்மக்கள் சேர்ந்து முதலையை அடித்து கொலை செய்துள்ளனர். குச்சிகள், கம்பிகள் மற்றும் கட்டையை கொண்டு தாக்கி உள்ளனர். பிறகு இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அஙக பகுதி போலீஸார் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ