வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளுக்கு பலரும் பக்குவமாய் பராமரித்து அதற்கேற்ற உணவுகளை வழங்குவார்கள், அதே சமயம் தெரு நாய்களை பலரும் கண்டுகொள்வதில்லை. தெரு நாய்கள் சாலைகளில் வீசப்படும் உணவுகள் போன்ற ஏதேனும் ஒன்றை தான் உணவாக உட்கொள்கிறது, இவற்றின் நலனில் பெரும்பாலும் யாரும் அக்கறை எடுத்து கொள்ளமாட்டார்கள். தற்போது மேற்கு வங்காளத்தின் டம் டம் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் பெண் ஒருவர் தெரு நாய் ஒன்றுக்கு சாதம் ஊட்டுகிறார், அப்பெண்ணின் இந்த செயலை கண்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா ஆனா அதுக்குன்னு இப்படியா
தற்போது வைரலாகும் வீடியோவில், ஒரு பெண் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அமர்ந்துக்கொண்டு தெருநாய்க்கு தனது கைகளால் உணவளிப்பதைக் காணலாம். அந்த நாயின் பெயர் குதுஷ் மற்றும் அதற்கு சுமார் 5 வயது இருக்கும், அந்த நாய்க்கு தயிர் சாதம் தவிர வேறு எந்தவித உணவும் பிடிக்காதாம். அந்த பெண் அவரது பிள்ளைக்கு சோறூட்டுவது போல அந்த நாய்க்கு சோறு ஊட்டுகிறார். மேலும் அவர் நாயின் விருப்பத்திற்கேற்ப தினமும் மூன்று முறை அந்த ரயில் நிலையத்திற்கு வந்து அந்த நாய்க்கு உணவினை ஊட்டிவிட்டு செல்கிறாராம்.
ரயில் நிலையத்தில் தெரு நாய்க்கு சோறூட்டிய பெண்ணின் வீடியோ வைரல்! pic.twitter.com/ThMmUxIMGG
— RJ RaJa (@rajaduraikannan) April 25, 2022
சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த பெண்ணை பாராட்டி வருகின்றனர். இதுவரை இந்த வீடியோ நான்காயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது, இதனை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதேபோன்று ஏற்கனவே முதியவர் ஒருவர் தனது சைக்கிளில் உணவை சுமந்துக்கொண்டு வந்து அதனை தெரு நாய்களுக்கு வழங்கிய காட்சி இணையத்தில் வைரலாக நிலையில், தற்போது இந்த வீடியோ இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது.
மேலும் படிக்க | பாச மலர்களா என்று கேட்க வைக்கும் குட்டி பையன்களின் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR