தம் அடிப்பது... அதாவது புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திரைப்படம் தொடங்குவதற்கு முன்பும் புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்ற முன்னறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், அந்த அறிவிப்பு விழிப்புணர்வுகளெல்லாம் மனிதர்களான நமக்கு தெரியும். நண்டுக்கு தெரியுமா? கடற்கரையோரம் சும்மா ஸ்டைலாக தம்மை பிடித்து ஒரு பிடி பிடிக்கிறது. புகையை ஸ்டைலாக அது வெளியிடுவது தான் இதில் இன்னொரு ஹைலைட்.
மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? குட்டியை தாக்கிய முதலையை துவம்சம் செய்த தாய் யானை, வைரல் வீடியோ
இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா பகிர்ந்துள்ளார். டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் நண்டு சிகரெட்டை புகைப்பதை நீங்கள் பார்க்கலாம். மனிதர்கள் சிகரெட்டை கையில் பிடித்து எப்படி ஸ்டைலாக புகைப்பார்களோ, அதைப்போலவே ஸ்டைலாக சிகரெட்டை பிடித்திருக்கிறது. பற்ற வைத்த சிகரெட்டு தான். யாரோ புகைப்பிடித்துவிட்டு போட்ட சிகரெட்டை அது எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த சிகரெட்டை எடுத்தவுடன் நண்டு வாயில் வைத்து ஸ்டைலாக புகைக்கிறது. இதனைப் பார்த்து அரண்டுபோனவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.
— Susanta Nanda (@susantananda3) September 20, 2020
வீடியோவை பார்த்து அரண்டுபோய் இருக்கும் நெட்டிசன்கள், கலிகாலம் என்பதை சொல்லக் கேட்டிருகிறோம். இப்போது நேரடியாக பார்த்துவிட்டோம். இது ஒரு பக்கம் ஜாலியனாதாக பார்த்தாலும், மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனை. இதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற செயல்கள் நமது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர். எரியும் சிகரெட்டை கண்ட இடத்திலும் எறிவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு இந்த நண்டு வீடியோவே சாட்சி என்றும் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | பாடாய் படுத்திய நபர்: பக்காவா பதிலடி கொடுத்த ஆடு, கொண்டாடும் நெட்டிசன்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ