நாய்க்குட்டிகளின் பாச மழையில் நனையும் பூனை! வைரலாகும் வீடியோ!

நான்கு நாய்க்குட்டிகள் ஒரு பூனைக்குட்டியை பாசமாக அரவணைத்துக் கொள்ளும் ஒரு அழகிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jun 5, 2022, 12:21 PM IST
  • பூனையை கொஞ்சும் நாய் குட்டிகள்.
  • பாசமாக அரவணைத்து கொண்டு விளையாடுகின்றன.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
நாய்க்குட்டிகளின் பாச மழையில் நனையும் பூனை! வைரலாகும் வீடியோ! title=

நான்கு நாய்க்குட்டிகள் ஒரு பூனைக்குட்டியை பாசமாக அரவணைத்துக் கொள்ளும் ஒரு அழகிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இனம் இனத்தோடு தான் சேரும் என்கிற பழமொழியை கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் விலங்குகள் அந்த பாரபட்சமின்றி மற்ற விலங்குகளையும் அரவணைத்து கொள்ளும் உயரிய பண்புகளை கொண்டிருக்கிறது என்பதை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நிரூபித்துள்ளது.  நாய்க்குட்டிகள் பூனைக்குட்டியை பாசமாக தங்களுடன் அரவணைத்து வைத்துக்கொள்ளும் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  இதுபோன்ற பல விலங்குகள் செய்யும் செயல்கள் மனிதர்களுக்கு ஒரு சிறந்த பாடத்தை கற்பிக்கும் விதமாக அமைகிறது.

dog

மேலும் படிக்க | பூனைகளின் சண்டையை தடுத்து நிறுத்திய நாய்...வைரல் வீடியோ!

ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த அற்புதமான வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில், ஒரு மெத்தையின் மீது நான்கு கருப்பு நிற நாய்க்குட்டிகள் படுத்திருக்கின்றன.  அப்போது அந்த நாய்க்குட்டிகளின் இடையே கொழுகொழுவென செம்பழுப்பு நிற பூனைக்குட்டி ஒன்று வந்து படுத்து கொள்கிறது.  அப்போது அந்த நாய்க்குட்டிகள் எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் உடனே அந்த பூனைக்குட்டிகளை தன்னுடன் அரவணைத்து வைத்துக்கொண்டு கொஞ்சுகிறது.  அதனைத்தொடர்ந்து அந்த பூனைக்குட்டி, நாய்குட்டியுடன் செல்லமாக மோதி அதனை கீழே தள்ளுகிறது.

 

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு நூற்றுக்கணக்கான லைக்குகளும், பல சிறப்பான கமெண்டுகளும் பதிவிடப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | நட்பே துணை... வைரலாகும் நாய் - பூனை வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News