அவன தொட்ட நீ கெட்ட! பூனைக்குட்டியிடம் எகிறிய நாய்க்குட்டி!

அமைதியாக அமர்ந்திருக்கும் எலிக்குட்டியை சீண்ட நினைத்த பூனைக்குட்டியிடம் நாய்க்குட்டி ஒன்று எகுறும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 14, 2022, 05:29 PM IST
  • எலியை பாதுகாக்கும் நாய்.
  • பூனையை கிட்ட வரவிடாமல் பாதுகாக்கிறது.
  • இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவன தொட்ட நீ கெட்ட! பூனைக்குட்டியிடம் எகிறிய நாய்க்குட்டி! title=

பெரும்பாலும் இணையத்தில் நாம் பார்த்த வீடியோக்களில் நாய்குட்டிகளும், பூனைக்குட்டிகளும் ஒன்றுக்கொன்று பாசமாக கட்டிபுரளும் வீடியோக்களை தான் பார்த்திருப்போம்.  ஆனால் இங்கு வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனைக்குட்டியிடம், நாய்க்குட்டி சண்டை போடுகிறது.  இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை இணையவாசிகள் பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.  அதிகப்படியான விலங்குகளின் அற்புதமான வீடியோக்கள் பெரும்பாலும் ட்விட்டர் பக்கத்தில் தான் பகிரப்பட்டு வருகிறது.

cat

மேலும் படிக்க | ஓனருக்கே டிவிஸ்ட் கொடுத்த நாய் - வைரல் வீடியோ

தற்போது இந்த வைரல் வீடியோவும் ட்விட்டரில், டாக்டர்.சம்ரத் கவுடா ஐஎஃப்எஸ் என்பவரது கணக்கு பக்கத்தில் தான் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில், ஒரு சோஃபாவிற்கு கீழே நாய்க்குட்டி ஒன்றும், பூனைக்குட்டி ஒன்றும் எதிரெதிரே அமர்ந்திருக்கிறது, அந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையே அழகிய எலிக்குட்டி ஒன்று அமைதியாக அமர்ந்து இருக்கிறது.  அந்த எலிக்குட்டியை பூனைக்குட்டி தொந்தரவு செய்ய முயல்கிறது, ஆனால் திடீரென்று எலிக்குட்டிக்கு பாடிகாட் போன்று நாய்க்குட்டி குறுக்கே புகுந்து பூனைக்குட்டியை தடுக்கிறது.  மீண்டும் பூனை, எலியை தொந்தரவு செய்யவிடாமல் நாய்க்குட்டி மிரட்டுகிறது, பின்னர் அந்த நாய்க்குட்டி பந்தாவாக சோஃபா மீது ஏறி அமர்ந்துகொண்டு பூனைக்குட்டியை மிரட்டுகிறது.

 

இந்த காணொளி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து இருக்கிறது, இணையத்தில் பகிரபட்ட இந்த வீடியோவை இரண்டாயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  நாய்க்குட்டி ஒரு சிறந்த பாடிகாட் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | விமானத்தில் ஏற அனுமதிக்காததால் பீதியடைந்த பெண் மயக்கம் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News