Viral Video: பாம்பெல்லாம் எனக்கு பஞ்சு மிட்டாய் மாதிரி... ராஜநாகங்களை அசால்டாக பிடிக்கும் நபர்!

King Cobra Viral Video: பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நேரில் பார்க்க முடியாத காட்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 24, 2023, 07:15 PM IST
  • ராஜ நாகம் மிகவும் விஷம் நிறைந்த பாம்பாக கருதப்படுகிறது.
  • வைரலான பாம்பு வீடியோ.
  • இசைக்கும் இசைக்கு பாம்பு நடனமாடுவதை நீங்கள் பார்த்திருக்க கூடும்.
Viral Video: பாம்பெல்லாம் எனக்கு பஞ்சு மிட்டாய் மாதிரி... ராஜநாகங்களை அசால்டாக பிடிக்கும் நபர்! title=

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நேரில் பார்க்க முடியாத காட்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் இருக்கும். சிங்கம், புலி போன்ற விலங்குகள் பயங்கரமான விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டாலும், மனிதர்களுக்கு மரண செய்தியை நேரடியாகக் கொண்டு வரும் விஷம் கொண்ட உயிரினம் பாம்பு தான். அதனால், தான் பாம்பு என்றால் படையே நடுங்கும் என்கின்றனர். பாம்புகளில் நூற்றுக்கணக்கான வகையான பாம்புகள் காணப்படுகின்றன, ஆனால் இவற்றில் 200 முதல் 300 இனங்கள் மட்டுமே மனிதர்களுக்கு ஆபத்தானவை. அத்தகைய பாம்புகளில் கிங் கோப்ரா என்னும் ராஜ நாகம்  முதலிடத்தில் உள்ளது. ராஜ நாகம் கடிக்க கூட வேண்டாம்... அது சீறினாலே, அதன் விஷம் காற்றில் கலந்து அதனை சுவாசிக்கும் நபர் சுயநினைவை இழக்கத் தொடங்குகிறார்.

நினைத்தாலே கதி கலங்க வைக்கும் இப்படிப்பட்ட மிகவும் ஆபத்தான பாம்பை, யாரேனும் ஒருவர் கைகளில் பிடித்துக் கொண்டு அசைத்தால், அது அதிசயத்தை விட பயங்கரமாகத் தெரிகிறது. பாம்பாட்டிகள், இசைக்கும் இசைக்கு பாம்பு நடனமாடுவதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். பல சமயங்களில் அதை கையில் பிடித்துக் கொண்டும் ஸ்டண்ட் காட்டுகிறார்கள், ஆனால் ஒரே நேரத்தில் மூன்று விஷப் பாம்புகளைக் கையாள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வைரலாகி வரும் இந்த அதிசயத்தை வீடியோவில் காணலாம்.

கைகளில் சிக்கிய 3 ராஜ நாகப்பாம்புகள்

வைரலான வீடியோவில், ஒல்லியான மனிதர் ஒருவர் கையில் கயிறு போன்ற பாம்பை வைத்திருப்பதைக் காணலாம். அவரது கைகளில் உள்ள பாம்பு ஒரு ராஜ நாகம், இது மிகவும் விஷம் நிறைந்த பாம்பாக கருதப்படுகிறது. இந்த மனிதன் தனது வெறும் கைகளால் மூன்று ராஜ நாகப்பாம்புகளைப் பிடித்து, அவை பாம்புகள் அல்ல, கயிறுகள் என்பது போல அவற்றை மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுவது போல் தெரிகிறது. கேமராவில் பதிவான இந்த பயங்கர காட்சியை பார்த்து அனைவரும் திகைத்து போயுள்ளனர். என்றாலும் அதுவும் மிகவும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

வைரலான பாம்பு வீடியோவை இங்கே காணலாம்

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by  (@its_rj_95)

 

பாம்பின் இந்த வைரல் வீடியோ Instagram சமூக வலை தளத்தில் its_rj_95 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்து லைக் செய்துள்ளனர். அந்த நபரின் இந்த துணிச்சலை பார்த்து பலரும்  பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி செய்வதற்கு அதிக தைரியம் தேவை என்று ஒரு பயனர் கூறினார். மறுபுறம், மற்றொரு பயனர் இது யாருக்கும் ஆபத்தாக முடியும் செயல், விவேகம் இல்லாத செயல், எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

சில நாட்களுக்கு முன் வைரலான ஒரு வீடியோவில், முட்டையை திருடுவதற்காக, கூடைக்குள் நுழைந்த ஒரு பாம்பு, வாயில் முட்டையுடன் கூடையில் சிக்கிக் கொண்டது. உயரத்தில் முட்டையுடன் கூடிய கூடை வைத்திருந்த நிலையில், அதனை சாப்பிட பாம்பு அங்கு வந்துள்ளது. கூடையின் பக்கங்களில் உள்ள துளைகள் மூலம் பாம்பு அதன் முகத்தையும் அதன் உடலின் ஒரு சிறிய பகுதியை நுழைத்துக் கொண்டு செல்கிறது. இருப்பினும், அது முட்டையை விழுங்கியபோது, அதன் தொண்டை பகுதி பெரிதானதால், கூடையிலிருந்து வாயை வெளியே எடுக்க முடியவில்லை. முட்டையைக் கைவிடாமல் கூடையிலிருந்து வெளியேற பாம்பு போராடுவது வீடியோவில் காணலாம். இறுதியில், பாம்பு முட்டையை வெளியே துப்ப வேண்டியிருந்தது. இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News