Viral Video: தாயின் அன்பிற்கு ஈடு இணையில்லை! குஞ்சுகளை காக்க குடையாக மாறிய கோழி!

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன என்றால் மிகையில்லை. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித ஆச்சர்யம் தரும் அல்லது அதிர்ச்சி தரும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 3, 2023, 04:10 PM IST
  • பறவைகள் பற்றிய பல ஆச்சரியமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளிவருகின்றன.
  • இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன.
  • அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக் கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
Viral Video: தாயின் அன்பிற்கு ஈடு இணையில்லை! குஞ்சுகளை காக்க குடையாக மாறிய கோழி! title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன என்றால் மிகையில்லை. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித ஆச்சர்யம் தரும் அல்லது அதிர்ச்சி தரும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன், சில கேளிக்கைக்கான ஒரு அம்சமாகவும்  உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக் கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய பல ஆச்சரியமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளிவருகின்றன. சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதை ஒரு முறை பார்க்கும் பயனர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதில் கோழியின் தாயன்பை பார்த்து ஆச்சர்யம் மேலிடும்.

மேலும் படிக்க |  Viral Video: மல்லுக்கட்டும் பூனைக் குட்டிகள்! இது பூனைகளின் மல்யுத்த போட்டி!

கோழியின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

 

 

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ லட்சக்கணக்கான மக்களை உணர்ச்சிவசப்படுத்தியது! இந்த வீடியோவை ட்விட்டர் பயனர் @Gabriele_Corno பிப்ரவரி 22 அன்று பகிர்ந்து கொண்டு, "ஒரு தாய் கோழி தனது குஞ்சுகளை மழையிலிருந்து பாதுகாக்கிறது" என்ற தலைப்பில் பதிவிட்டார். மழை பெய்து கொண்டிருப்பதையும், கோழி தனது சிறகுகளை விரித்திருப்பதையும், அதன் கீழ் தனது குஞ்சுகள் தஞ்சமடைந்திருப்பதையும் வீடியோவில் காணலாம். மழையில் நனையாமல் குழந்தைகள் காப்பாற்ற  நினைக்கும் தாயின் உறுதியான் எண்ணத்தை இதில் காணலாம். தான் முழுவதுமாக நனைந்திருக்கும் போதும், குஞ்சுகளை காப்பதில் உறுதியாக இருக்கிறது அந்த கோழி. இந்த வீடியோவைப் பார்த்து, ஒரு சில பயனர்கள் தாய்க்கு ஈடு இணை இல்லை என்று பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் அம்மா என்ன நிலையில் இருந்தாலும் சரி, குழந்தைகளை பாதுக்காப்பதில் சிறிதும் பின்வாங்குவ்பதில்லை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீடியோவைப் பார்க்கும் பயனர்களால் கோழியின் தாயன்பை நன்றாக புரிந்துகொள்ள முடியும். 

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

 

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News