Viral Video: தன்னை மறந்து ஆடிய மணமகன், ஈடு கொடுத்து தூள் கிளப்பிய மணமகள்

மணமகன் மேள தாளத்துக்கு ஏற்ப மணமகளுக்கு முன்னால் நடனமாடத் தொடங்கினார். மணமகன் நடனமாடுவதைப் பார்த்து, மணமகளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2021, 06:13 PM IST
Viral Video: தன்னை மறந்து ஆடிய மணமகன், ஈடு கொடுத்து தூள் கிளப்பிய மணமகள் title=

Viral Video: திருமணங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் ஆகும். ஒரு திருமணம் நடக்கும்போது, அதில் மணம் முடிக்கும் இருவர் மட்டுமல்லாமல், அவர்களைச் சார்ந்த பலரும் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்.

அமர்க்களமான நடனங்கள் இல்லாமல் திருமணங்கள் நிறைவு பெறுவதில்லை. முன்னர், திருமணத்திற்கு வரும் நபர்களோ அல்லது கலைஞர்களோதான் நடமாடுவார்கள். ஆனால், இந்த நாட்களில், மணமகனும், மணமகளுமே களத்தில் இறங்கி விடுகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை நினைவில் இருக்கும் வகையில் அவர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த வீடியோவைப் பார்த்தால், இந்த திருமணம் (Marriage) இந்தியாவிற்கு வெளியே, ஆனால் இந்திய பாணியில் நடத்தப்பட்ட திருமணம் என்பதை யூகிக்க முடிகிறது. இந்த பதிவில் உள்ள தலைப்பின் மூலம், மணமகள் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் இந்திய மரபுகளின்படி, ஒரு இந்தியரை மணக்கிறார் என்றும் தெரிகிறது.

முதலில், மணமகன் மேள தாளத்துக்கு ஏற்ப மணமகளுக்கு முன்னால் நடனமாடத் தொடங்கினார். மணமகன் நடனமாடுவதைப் பார்த்து, மணமகளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரும் இடுப்பை அசைத்து சில துள்ளலான நடன அசைவுகளுடன் தன் ஆட்டத்தைத் துவக்குகிறார்.

பின்னர் இருவருமாக சேர்ந்து, மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப அட்டகாசமாக நடனமாடி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் (Instagram) ஷிவம் என்றவரின் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் தலைப்பு, 'இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக சந்திக்கும் போது ...' என்று வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ: சர்வைவர் போட்டியில் விபத்து; வெளியான அதிர்ச்சி வீடியோ

மணமகவும் மணமகளும் துள்ளலாக நடனமாடும் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by shivam (@shivamshivam8450)

இந்த வேடிக்கையான நடன வீடியோ வைரலாகியுள்ளது (Viral Video). இந்த வீடியோ 148,274 க்கும் மேற்பட்ட லைக்குகளையும், பல கமெண்டுகளையும் குவித்துள்ளது. கமெண்டுகளில் மக்கள் இந்த  உற்சாகமான தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த ஜோடி அதிரடியாக நடனமாடுவதுதான் இந்த வீடியோவின் சிறந்த பகுதியாகும்.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் இந்த நடனத்தை விரும்பி ரசித்தனர். மணமகனும், மணமகளும் சரியான ஜோடி என அனைவரும் வாழ்த்தினர்.

சில நாட்களுக்கு முன்னர் வைரலான இதே போன்ற மற்றொரு வீடியோவில், ஒரு மணமகள் திருமண மேடையை நோக்கி நடக்கும்போது மணமகன் பாங்க்ரா நடனமாடுவதைக் கண்டோம். அழகான மணமகள் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தவுடன், மணமகன், மணமகளையும் விருந்தினர்களையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் முழு உற்சாகத்துடன் ஆடத் தொடங்கினார்.

ALSO READ: Viral Video: டி வில்லியர்ஸ் அவுட்டானதும் விரக்தியான மகன்; க்யூட் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News