சவாலுக்கு தயாரா! மானை குறிவைக்கும் விலங்கை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

வைரல் படத்தில் ஒரு மான் மட்டும் இல்லை, அதை வேட்டையாட துடிக்கும் ஒரு விலங்கும் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் படத்தில் உள்ள வேட்டைக்காரனைக் கண்டுபிடிக்கத் தவறிவிடுகிறார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 11, 2022, 06:00 PM IST
சவாலுக்கு தயாரா! மானை குறிவைக்கும் விலங்கை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! title=

சமூக வலைதளங்களில் பகிரப்படும் பல படங்கள் தலை சுற்றும் வகையில் இருக்கும். சில படங்களில் சில விஷயங்களை கண்டுபிடிப்பது சவாலானதாக இருக்கும். இதில் பெரும்பாலானோர் தோல்வி அடைகிறார்கள். ஆனால் கூர்மையான கண்களும் கூர்மையான மனமும் கொண்டவர்கள்  வெகு சீக்கிரமே கண்டுபிடிப்பார்கள். 

சமூக ஊடகத்தில் வனத்துறை அதிகாரி பகிர்ந்து கொண்ட ஒரு படம் ஒரு மானுடன் தொடர்புடையது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், மானை இரையாக்கும் மிருகமும் அதில் ஒளிந்துள்ளது, மானுக்கு அது தெரியாது. படத்தில் வேட்டையாடும் விலங்கு எங்கே என்று  உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்கள் நிச்சயம் திறமை சாலி தான். அதில் மானை இரையாக்க துடிக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முடியாமல் பெரும்பாலானோர் தோல்வி அடைந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் படத்தில் காட்டுக்குள் தண்ணீர் குடிக்க வந்த மானை வேட்டையாடும் நோக்கில்,   வாய்ப்பை எதிர்பார்த்து ஒரு வேட்டை விலங்கு காத்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் உற்றுப் பார்த்தால், இந்த வேட்டைக்காரன் எங்கே இருக்கிறான் என்பதும் தெரியும்.

மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!

மான் தொடர்பான இந்த படத்தை ஐஎஃப்எஸ் அதிகாரி ரமேஷ் பிஷ்வோய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் , " மானை உற்று நோக்கும் வேட்டைக்காரன்  வேட்டைக்காரனைக் கண்டுபிடிக்க முடியுமா?"  என கேட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, வேட்டைக்காரனைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். 

மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News