உத்திரப்பிரதேசத்தின் மெய்புரியில் நிஜ வாழ்க்கையில் நடந்த வியப்பை தரும் வினோத வழக்கில், உங்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தலாம். திருமணமான சந்தோஷத்தில், மண வாழ்க்கை குறித்த கனவுகளில் மிதந்த மணமகனுக்கு, பேரிடியாக, ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தனியார் தொலைகாட்சி ஒன்றில் இந்த சம்பவம் குறித்து செய்தி அறிக்கை வெளியானது. ஒரு தரகர் மூலமாக ராஜூ என்ற இளைஞனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், ராஜூவின் தந்தையின் முன் ஒரு நிபந்தனையை விதிக்கப்பட்டது. திருமணம் நடக்க மணமகள் குடும்பத்திற்கு ரூ .80,000 கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. ராஜுவிற்கு நீண்ட காலமாக திருமணம் ஆகாததால், அவரது தந்தையும் , மகனுக்கு திருமணம் ஆகவேண்டும் என நினைத்து நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.
ALSO READ: Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!
திருமண ஒப்பந்தப்படி, மணப்பெண் பணத்தை வாங்கிய பிறகு, ஆகஸ்ட் 17 அன்று கோவிலில் ஒன்றில் ராஜுவை மணந்தார். பணத்தை கொடுத்ததை தவிர ராஜுவின் தந்தை ராஜேந்திரா தனது மருமகளுக்கு உடைகள், நகைகள் மற்றும் பல பரிசுகளையும் கொடுத்தார். திருமணம் முடிந்ததும், மண வாழ்க்கை குறித்த கனவுகளுடன் ராஜு மனைவியுடன் தனது வீட்டிற்கு புறப்பட்டார். தம்பதியினர் பேருந்தில் ஏறுவதற்காக பேருந்து நிலையத்தை அடைந்தபோது, மணமகள் தாகமாக இருப்பதாகக் கூறி ராஜூவிடம் தண்ணீர் பாட்டிலை கொண்டு வரும் படி சொன்னார்.
ராஜு தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு திரும்பியபோது, மணமகளை காணவில்லை. அதோடு, அந்த மணமகள் பணம், நகை என எல்லாவற்றையும் எடுத்துச் சென்றதை அறிந்த அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
ALSO READ | பல் தேய்த்த பெண் பரிதாபமாக பலி: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR