பாகிஸ்தானுக்கு சொந்தமான PK 750 என்ற விமானம் இரவு 9 மணிக்கு பாரிசில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத்துக்கு செல்வதற்காக தயார் நிலையில் இருந்தது. பயணிகள் அனைவரும் உள்ளே சென்று அமைர்ந்துள்ளனர். ஆனால் சில காரணங்களால் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. பயணிகளும் உள்ளேயே தங்க வைக்கப்பட்டனர். அப்பொழுது விமானத்தின் ஏர் கண்டிஷனிங் யூனிட் அணைக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் தாமதமானதால், விமானத்தில் இருந்த பெண் ஒருவருடைய 5 மாதக்குழந்தை காற்று மயக்கம் அடைந்தது. உடனே அந்த பெண்மணி விமான உதவியாளரிடம் கதவு திறக்கும் படி கேட்டார். ஆனால் அவர் மறுத்து விட்டார். அந்த பெண்மணி என் குழந்தை மயக்கமடைந்து விட்டது, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. தயவு செய்து கதவை திறங்கள் என கெஞ்சியும் அழுதும் கேட்டார். ஆனால் விமான உதவியாளர் தங்களுக்கு முறையான அறிவிப்பு வரும் வரை கதவை திறக்க முடியாது என்று கூறிவிட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த அங்கிருத்த பயணிகள் "வெட்கம், அவமானம்" என கோசங்களை எழுப்பினர். உடனே கதவுகள் திறக்கப்பட்டு, தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள், அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினார்கள். இச்சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆணையிட்டு உள்ளது பாகிஸ்தான் சர்வதேச விமான நிலையம்.