உலகம் முழுவதும் வன விலங்குகள் ஊர் பகுதிகளுள் நுழையும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகிரித்து வருகிறது. வனத்துறையினரும் வனவிலங்குகள் மற்றும் மக்கள் மோதலை தவிர்க்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும், முழுமையாக கட்டுபடுத்த முடியவில்லை. இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளன. கோடைகாலம் என்பதால், வன விலங்குகளின் வருகை அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் புகுகின்றன.
மேலும் படிக்க | மூதாட்டிக்காக ரோட்டை பிளாக் செய்த இளைஞர் - வைரல் வீடியோ
யானைகள் மற்றும் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வந்த நிலையில், குன்னூரில் கரடியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நள்ளிரவில் கரடிகள் வந்து, வீதிகளில் சர்வ சாதாரணமாக உலாவுகின்றன. வீடுகளின் கதவுகளையும் அவை தட்டுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அதில், குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் இரவு கரடி ஒன்று அங்கிருந்த வீட்டின் கதவை தட்டுகிறது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள தெருவிற்கு சென்று அங்கும் வீட்டின் கதவை தட்டியுள்ளது. இந்த வீடியோ கிராமத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. வனத்துறையினர் கரடியை கண்கானித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | இது என்னடா காட்டு யானைக்கு வந்த சோதனை: வைரலாகும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR