சமையல் பாத்திரத்தால் முதலையை அடித்து விரட்டிய முதியவர் - வைரல் வீடியோ

தன்னை தாக்க வந்த முதலையை முதியவர் ஒருவர் சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டிய வீடியோ வைராகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 23, 2022, 10:43 AM IST
  • தாக்க வந்த முதலையை பாத்திரத்தால் விரட்டிய முதியவர்
  • இந்த வீடியோவை 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்
சமையல் பாத்திரத்தால் முதலையை அடித்து விரட்டிய முதியவர் - வைரல் வீடியோ title=

தாக்க வந்த புலியை பெண் ஒருவர் முறத்தால் அடித்தே துரத்தினார் என்ற கதை தமிழ் சங்க இலக்கியத்தில் உண்டு. அது கதையாக கூறப்பட்டாலும் இதுவரை அப்படி ஒரு காட்சியை யாரும் பார்த்தது இல்லை.  தற்போது அதை உண்மையாக்கும்விதமாக ஆஸ்திரேலியாவில் முதியவர் ஒருவர் சம்பவம் ஒன்று செய்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கிறது டார்வின் என்ற இடம். அங்கு ஹேன்சன் என்ற முதியவர் பப் (கேளிக்கை விடுதி) ஒன்றை நடத்திவருகிறார். அந்த கேளிக்கை விடுதி வனப்பகுதி அருகே அமைந்திருப்பதால் வன விலங்குகள் அங்கு வருகின்றன.

Hansen

இந்நிலையில் கேளிக்கை விடுதிக்கு வெளியே ஹேன்சன் வந்தபோது முதலை ஒன்று அதன் வாயை திறந்தபடி அவரை தாக்க வந்தது. அப்போது சுதாரித்துகொண்ட முதியவர் ஹேன்சன் தனது கையில் இருந்த சமையல் பாத்திரத்தை (Frying Pan) வைத்து முதலையின் தலையில் அடித்தார். 

மேலும் படிக்க | திசை மாறிய காட்டுப்பன்றியின் குறி: திண்டாடும் வேட்டைக்காரர்: சீறும் காட்டுப்பன்றி

இதனை எதிர்பார்க்காத முதலை உடனடியாக பின்வாங்கி காட்டுக்குள் ஊர்ந்துசென்றுவிட்டது. தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

இதுவரை இந்த வீடியோவை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து, அந்த முதியவருக்கு பாராட்டு தெரிவித்து வீடியோவை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | கார் ஜன்னலில் அமர்ந்து ஜாலியாக சவாரி செய்யும் கிளி; இணையத்தை கலக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News