Video: தாயை இழந்த குழந்தைக்காக, பெண்ணாய் மாறிய தந்தை!

அன்னையர் தினத்தில், தன் தாயை இழந்த குழந்தைக்கு அன்னையாக மாறிய தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Written by - Mukesh M | Last Updated : Aug 16, 2018, 01:37 PM IST
Video: தாயை இழந்த குழந்தைக்காக, பெண்ணாய் மாறிய தந்தை! title=

அன்னையர் தினத்தில், தன் தாயை இழந்த குழந்தைக்கு அன்னையாக மாறிய தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

தாய்லாந்த் நாட்டின் அன்னை என அழைக்கப்படும் ராணி ஸிர்கிட்டி-யின் பிறந்த நாளான ஆகஸ்ட்.,12-ஆம் நாள் தாய்லாந்த் நாட்டின் அண்ணையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் பள்ளி குழந்தைகள் அவர்களது அன்னையுடன் பள்ளி வருவது வழக்கம். ஆனால் தாய்லாந்தின் உத்தாய் என்னும் பகுதியை சேர்ந்த சாட்சாய் பார்ன் என்பவரது 5 வயது மகனுக்கு தாய் இல்லை என்பதால் தானே தாயாக மாறி பள்ளிக்கு சென்றுள்ளார்.

சாட்சாய் பார்ன்-ன் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்துவிட்ட காரணத்தால் பள்ளி நிகழ்ச்சியில் தன் மகனது மனம் புன்படாமல் இரக்கவேண்டும் என விரும்பிய சாட்சாய் பார்ன், பெண் வேடமிட்டு தன் மகனுடன் பள்ளிக்கு சென்றுள்ளார.

இச்சம்பத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதற்கு முன்னதாக கடந்தாண்டு இதேப்போன்ற நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலானது. இதப்போன்று பள்ளியின் ஒருங்கினைக்கப்பட்ட பெற்றோர் தினத்தில் குழந்தைகள் அனைவரும் தங்களது பெற்றோரினை அழைத்துவர, தன் பெற்றோரினை இழந்த குழந்தை ஒருவர் காலி நாற்காலியில் பூ வைத்து வழிபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது!
 

Trending News