திருமண பரிசாக LPG சிலிண்டர், பெட்ரோல், வெங்காயம் வழங்கிய நண்பர்கள்

5 லிட்டர் பெட்ரோல், வெங்காய மாலை மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை திருமண பரிசாக அளித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2021, 12:58 PM IST
திருமண பரிசாக LPG சிலிண்டர், பெட்ரோல், வெங்காயம் வழங்கிய நண்பர்கள் title=

சென்னை: மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் வெங்காயம், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவை வழங்கிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நாடு முழுவதும் தற்போது பெட்ரோல் விலை, சமையல் எரிவாயு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இவை அனைத்தும் வரலாறு காணத வகையில், அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை 92 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. அதே சமயம் சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.785 ஆக உள்ளது. மேலும் இதேபோன்று சின்ன வெங்காயமும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

ALSO READ | 2021 ஆம் ஆண்டின் திருமண சுப முஹூர்த்த நாட்கள் இவையே!

இந்நிலையில் தற்போது சென்னை மதுரவாயலை சேர்ந்த கார்த்திக் மற்றும் சரண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரவாயல் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல், சின்ன வெங்காய மாலை, சமையல் எரிவாயு ஆகியவற்றை, விலை ஏற்றத்தை எடுத்துதுகூறும் விதமாக மணக்களுக்கு பரிசாக அளித்தனர். 

 

 

இந்த செயல், திருமணத்தில் பங்கேற்றவர்களிடையே  பெரும் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ | இறைவனை துதிக்க உதவும் ஜெபமாலை பற்றிய சுவாரஷ்யாமான தகவல் இதோ..!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News