Superwoman: சேலை அணிந்து அசால்டாய் உடற்பயிற்சி சாகசம் செய்யும் டாக்டரின் வைரல் வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு நம்மில் பலரை வீட்டுக்குள் முடங்கி இருக்க வைத்துள்ளது. பலர் இந்த ஊரடங்கில் பல புதிய உணவு வகைகளை செய்து பார்த்து, சாப்பிட்டு பார்த்து தங்களது உடல் எடையை அதிகரித்துக் கொண்டனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 19, 2021, 06:15 PM IST
  • சேலை அணிந்து அசால்டாய் எடை தூக்கும் பயிற்சியை செய்யும் டாக்டர்.
  • மனம் இருந்தால் உடை ஒரு தடை அல்ல என நிரூபிக்கிறார் இந்த பெண் மருத்துவர்.
  • இந்த மருத்துவரின் உடற்பயிற்சி வீடியோ வைரல் ஆனது.
Superwoman: சேலை அணிந்து அசால்டாய் உடற்பயிற்சி சாகசம் செய்யும் டாக்டரின் வைரல் வீடியோ title=

கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு நம்மில் பலரை வீட்டுக்குள் முடங்கி இருக்க வைத்துள்ளது. பலர் இந்த ஊரடங்கில் பல புதிய உணவு வகைகளை செய்து பார்த்து, சாப்பிட்டு பார்த்து தங்களது உடல் எடையை அதிகரித்துக் கொண்டனர். 

உடல் ரீதியான நடவடிக்கைகள் மிகவும் குறைந்து சோம்பல் அதிகரித்து விட்டது. ஒழுங்கான ஆரோக்கியத்தை திரும்பப்பெறவும் உடற்பயிற்சி செய்வதற்கும் இது உங்களுக்கு ஏற்ற பதிவாக இருக்கும். 

புனேவைச் சேர்ந்த டாக்டர் ஷர்வாரி இனாம்தார் பற்றி தெரிந்துகொண்டால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல உத்வேகம் கிடைக்கும். அவரது தினசரி உடற்பயிற்சி முறைகள் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். சமீபத்தில் சேலை அணிந்தபடி ஒரு ஜிம்மில் எடை பயிற்சி செய்த அவரது வீடியோ இணையத்தில் வைரல் (Viral Video) ஆனது.

அது மட்டுமல்லாமல், அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். புஷ்-அப்கள், புல்-அப்கள் மற்றும் எடைப் பயிற்சியிலும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். வைரலாகியுள்ள அவரது வீடியோக்களில், அவர் அழகான சேலை அணிந்தபடி சிரமமின்றி புஷ்-அப்கள், லிஃப்ட்கள், கனமான டம்பல் கொண்ட பைசெப் கர்ல்ஸ் மற்றும் மேலும் சில கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதையும் பார்க்க முடிகிறது. 

ALSO READ: உடற்பயிற்சி செய்வதை திடீரென நிறுத்தினால் உடலில் இத்தனை பாதிப்புகள் ஏற்படுமா?

ஒரு முன்னணி செய்தி சேனலுடன் பேசிய டாக்டர் ஷர்வாரி இனாம்தார், “வெளிப்படையாகச் சொன்னால், பெண்கள் தினமும் புடவை அணிவதில்லை. அனைத்து பெண்களுக்கும் சேலை அணிவது வசதியாக இருப்பதில்லை. ஆனால் இந்திய கலாச்சாரத்தின் படி, நாம் கொண்டாட்டங்கள் மற்றும் பண்டிகைகளின்போது சேலையை அணிகிறோம். சேலையை (Saree) அணிவதால் நம்மால் நமது உடல் நலனை கவனித்துக்கொள்ள முடியாது என்பதோ, உடற்பயிற்சி செய்ய முடியாது என்பதோ இல்லை. அதைதான் நான் எடுத்துக்கூற விரும்புகிறேன்ன்" என்று கூறினார். 

ஒவ்வொரு பெண்ணும் தனது உடற்பயிற்சி அட்டவணையில் எடை பயிற்சியை சேர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"பல பெண்கள் யோகா அல்லது நடனப் பயிற்சிகளைச் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் நாம் நமது உடற்பயிற்சி வழக்கத்தில் எடைப் பயிற்சியையும் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இளமையாக இருக்கவும், வலிமையுடன் வாழ்க்கையை அனுபவிக்கவும் இது உதவும்." என்று அவர் மேலும் கூறினார்.

தனது கடுமையான தினசரி உடற்பயிற்சிகள் (Exercise) மூலம், அனைத்து வயதினரையும் அவர் தொடர்ந்து ஊக்குவித்துக்கொண்டு இருக்கிறார். முறையான உடற்பயிற்சிகள் மற்றும் சரியான வாழ்க்கைமுறை மூலம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என்பதற்கு அவர் ஒரு சான்றாக உள்ளார்.

ALSO READ: Anand Mahindra பகிர்ந்த வீடியோவில் பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் 6 வயது சிறுமி, வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News