Ashes Series: வரம்பு மீறும் ரசிகர்கள்! தேநீர் இடைவெளியா? திட்டும் நேரமா?

சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, ​​பார்வையாளர்கள் 2 கிரிக்கெட் வீரர்களை கண்டபடி பேசி அவமதித்த வீடியோ வெளியாகியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2022, 07:19 AM IST
  • கிரிக்கெட்டர்களை திட்டும் ரசிகர்கள்
  • தேநீர் இடைவெளியில் கலாட்டா
  • வரம்பு மீறும் ரசிகர்கள்
Ashes Series: வரம்பு மீறும் ரசிகர்கள்! தேநீர் இடைவெளியா? திட்டும் நேரமா? title=

சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, ​​பார்வையாளர்கள் 2 கிரிக்கெட் வீரர்களை கண்டபடி பேசி அவமதித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதிர்ச்சி ஏற்படுத்தும் அந்த வீடியோ வைரலாகிறது.  

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் (Ashes Test Series) தொடரின் போது பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) மற்றும் ஜானி பேர்ஸ்டோவை (Jonny Bairstow) பார்வையாளர்கள் அவமதித்தனர்.

cricket

ரசிகர்கள் தங்கள் தேநீர் இடைவேளையின் போது அவமதித்தது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ, சில நேரங்களில் மக்கள் வரம்பு மீறுகிறார்கள் என்று வருத்தப்பட்டார்.

கிரிக்கெட் வீரர்கள் இருவரையும் ரசிகர்கள் அவதூறாக பேசும் வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிறது.

சிட்னியில் பேர்ஸ்டோவ்-ஸ்டோக்ஸ் வலிமையை வெளிப்படுத்தினர்
சிட்னி டெஸ்டின் 3வது நாளில் 36/4 என்ற நிலையில், பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் (103*) 5வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸுடன் (66) 128 ரன்களையும், பின்னர் 6வது விக்கெட்டுக்கு மார்க் வுட் (39) உடன் இணைந்து 72ரன்களையும் எடுத்தார்.

ALSO READ | T20-க்கு 2 புது ரூல்ஸ் கொண்டு வந்த ஐசிசி

இந்தப் போட்டியில் தனது 7வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் ஜானி பேர்ஸ்டோ. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 258/7 ரன்கள் எடுத்திருந்தாலும், ஆஸ்திரேலியாவை விட 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
 
தேநீர் இடைவேளையின் போது அவமதித்த பார்வையாளர்கள் 
இதற்கிடையில், தேநீர் இடைவேளையின் போது, ​​​​பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் டிரஸ்ஸிங் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​​​சில ரசிகர்கள் அவர்களை கேவலமாக பேசினார்கள். இது சிட்னி மார்னிங் ஹெரால்டின் காணொளியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

'சில ரசிகர்கள் வரம்பு மீறுகிறார்கள்'
'இது நல்லதல்ல, தேவையும் இல்லை. நாங்கள் எங்கள் வேலையை செய்ய முயற்சிக்கிறோம். மக்கள் கிரிக்கெட்டை (Ashes Test Series) ரசிக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, சில நேரங்களில் சில ரசிகர்கள் வரம்பை மீறுகிறார்கள். எனவே சில சமயங்களில் இதற்காக குரல் எழுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது' என்று இது குறித்து ஜானி பேர்ஸ்டோ கருத்து தெரிவித்தார்.

ALSO READ | Ashes Viral: ஸ்டம்பை ’இரும்பில்’ செஞ்சிருப்பாங்களோ?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News