வீட்டில் தனியாக குழந்தைகளை வீட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு பல வித அச்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட அச்சங்களை அதிகரிக்கும் விதமாக ஒரு சம்பவம் சீனாவில் (China) நடந்துள்ளது. இதை பெற்றோரின் அலட்சியம் என்று கூறுவதா அல்லது சமுதாய நிர்பந்தம் என்பதா என தெரியவில்லை.
சீனாவில் 5 வயது சிறுவன் ஒருவன் டிவி பார்த்துக்கொண்டே 123 காந்த மணிகளை விழுங்கியதால் அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தை தனது 12 வயது சகோதரியுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளான். இரண்டு சிறிய குழந்தைகளையும் தனியாக விட்டு வீட்டு அவர்களது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர்.
டிவி (TV) பார்க்கும் ஆர்வத்தில், அந்தச் சிறுவன் தனக்கு அருகில் இருந்த சிறிய பொம்மை பந்துகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக விழுங்கினான் என்று குயாங் ஈவினிங் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெற்றோர் திரும்பி வந்தபோது, சிறுவன் ஒரு மணியை மட்டுமே சாப்பிட்டதாக அவர்களிடம் குறியுள்ளான். இருப்பினும் அவனது பெற்றோர் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
சிறுவன் ஒரு மணியைத் தான் விழுங்கியுள்ளான் என்று கருதி, ஒரு உள்ளூர் மருத்துவர் அவர்களிடம் பொம்மை பந்து ஒரு சில நாட்களில் அவன் உடலிலிருந்து கழிவோடு வெளியேற்றப்படும் என்று கூறினார். இருப்பினும், ஒரு வாரத்திற்குப் பிறகும் அது நடக்காததால், சிறுவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
மருத்துவமனையில், மருத்துவர்கள் சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்தனர். அப்போதுதான் அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர். சிறுவனின் உடலுக்குள் ஏராளமான சிறிய மணி பந்துகள் இருப்பது எக்ஸ்ரே அறிக்கையில் தெரிய வந்தது.
ALSO READ: Watch: 2 km ஓடி ஆம்புலன்சை தடையின்றி ஓட வைத்த Traffic Constable, Video Viral!!
இதனையடுத்து ஒரு அவசர அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மொத்தம் 123 காந்த மணிகள் சிறுவனது உடலில் இருந்து எடுக்கப்பட்டன.
“ஒரு சிறுவனால் இத்தனை காந்த மணிகளை விழுங்க முடியும் என்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது. காந்த மணிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் பெரியதாக இருந்ததால், அறுவை சிகிச்சை செய்ய எடுக்கப்பட்ட நேரமும் அதிகமாக இருந்தது. செயல்முறையும் கடினமாக இருந்தது” என்று முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வான்வே சென் செய்தியாளர்களிடம் கூறினார்.
"இரண்டு அறுவை சிகிச்சை கருவிகள் தேய்ந்து போயின. பந்துகள் அனைத்தையும் வெளியே எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை பெரியவர்களின் கண் பார்வையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமன ஒரு விஷயம் என்பதற்கும் இப்படிப்பட்ட சம்பவங்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.
ALSO READ: பெண்கள் வேட்டையிலும் சிறந்தவர்களா? 9000 ஆண்டு புதைகுழி சொல்லும் சரித்திரம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR