குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் காவலருக்கு கிடைத்த பரிசு...

விரைவில் காவலர்களின் குழந்தைகளுக்கு என தனியான காப்பகம் அமைக்கப்படும் என உ.பி DGP உறுதியளித்துள்ளார்.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2018, 04:26 PM IST
குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் காவலருக்கு கிடைத்த பரிசு... title=

விரைவில் காவலர்களின் குழந்தைகளுக்கு என தனியான காப்பகம் அமைக்கப்படும் என உ.பி DGP உறுதியளித்துள்ளார்.....

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் தனது 6 மாத குழந்தையை அருகில் மேஜையில் உறங்கவைத்துவிட்டு பணியாற்றும் பெண் காவலரின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் காவலருக்கு உயரதிகாரிகளும், சமூக வலைதளப் பயன்பாட்டாளர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

கோட்வாலி (Kotwali) காவல் நிலையத்தில் கான்ஸ்டெபிளாகப் பணியாற்றும், அர்ச்சனாவுக்கு அனிகா என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளது. வீட்டில் கணவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால், காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று, மேஜையில் உறங்க வைத்துவிட்டு, தமது பணிகளைப் பார்க்கிறார். இந்த புகைப்படத்தை தமது டிவிட்டரில் பதிவிட்ட காவல்துறை உயரதிகாரி ஒருவர், அப்பெண்ணின் கடமையுணர்வைப் பாராட்டியுள்ளார். அவருக்கு மற்றொரு உயரதிகாரி ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். 

பெண் கான்ஸ்டபிளின் கடமையைப் பாராட்டுவதை விட, அனைத்து காவல் நிலையங்களிலும் ஆண், பெண் காவலர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் அறை ஒதுக்கித் தருமாறு உயரதிகாரிகளுக்கு சமூக வலைதளப் பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது, காவல்துறையை மேம்படுத்தி, மன இறுக்கத்தை தளர்த்தி, அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவும் என கூறியுள்ளனர். 

இதை தொடர்ந்து, உயரதிகாரி உத்தரபிரதேசம் DGP சிங்க், விரைவில் காவலர்களுக்கு என குழந்தைகளை காப்பகம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார். 

இதையடுத்து, பெண் போலீஸ் கான்ஸ்டபிள் அர்ச்சனா அவரின் தாய், தந்தையர் வசிக்கும் ஆக்ராவுக்குப் பணி இட மாற்றமும் வழங்கி உள்ளனர். மேலும், இவர் இந்த நூற்றாண்டின் பெண்களுக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவர் கடமை தவறாத கடின உழைப்பாளி'' என்று பாராட்டி உள்ளனர். இந்தப் பணியிட மாற்றம் குறித்து அர்ச்சனா, `தான் பெற்றோரையும், கணவரையும் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிறது எனவும், தற்போது இந்தப் பணியிட மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

 

Trending News