‘நீயா நானா பார்த்துடலாம்’: நாகப்பாம்பை வெச்சி செஞ்ச கீரிப்பிள்ளை, வைரல் வீடியோ

Snake Mongoose Fight Video: இப்படி ஒரு சண்டையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பாம்புக்கும் கீரிப் பிள்ளைக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 12, 2022, 11:43 AM IST
  • இரை தேடிய நாகப்பாம்பு.
  • எதிரில் வந்த கீரிப் பிள்ளை.
  • பல்பு வாங்கிய பாம்பின் வைரல் வீடியோ.
‘நீயா நானா பார்த்துடலாம்’: நாகப்பாம்பை வெச்சி செஞ்ச கீரிப்பிள்ளை, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

தற்போதும் பொதுவாக காணக்கிடைக்காத வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. பாம்புகளின் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன. குறிப்பாக பாம்பு மற்றும் கீரிப்பிள்ளை சண்டை போடும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் காணப்படுகின்றன. இந்த இரண்டும் எதிர் எதிரே வந்தால், அங்கு சண்டை வருவது நிச்சயம். அப்படிப்பட்ட ஒரு பயங்கர சண்டையின் வீடியோ தற்போது பகிரப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ வயல்களுக்கு அருகில் நீர் நிரம்பியுள்ள இடத்தில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. தண்ணீர் நிரம்பியுள்ள வயலில் ராஜ நாகம் இரை தேடுகிறது. ஆனால் எளிய இரையை வேட்டையாடலாம் என எண்ணும் ராஜநாகம் தனது மிகப்பெரிய போட்டியாக விளங்கும் கீரியை எதிர்கொள்கிறது. வீடியோவில் இதற்கு பிறகு நடக்கும் நிகழ்வுகளை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. 

மேலும் படிக்க | கீழே எதுவும் தள்ளிவிட்டுறதா! மான் மீது சவாரி செய்யும் குரங்குக் குட்டி!

நாகப்பாம்பின் எதிரே வந்து நின்ற கீரிப் பிள்ளை

ஆபத்தான நாகப்பாம்பை பார்த்த கீரிப்பிள்ளை அதைக் கண்டு அஞ்சவில்லை. எடுத்த எடுப்பிலேயே அதை தாக்கத் தொடங்குகிறது. தொடக்கத்தில் கீரிப் பிள்ளையின் தாக்குதலை முழு பலத்துடன் எதிர்கொண்ட பாம்பு, மெல்ல மெல்ல அதன் சுறுசுறுப்புக்கு முன்னால் பலவீனமடைந்தது. அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில், எனக்கு இந்த சண்டை வேண்டாம் என்று கூறுவது போல நாகப்பாம்பு பின்வாங்குவதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

எனினும், மற்றொரு ஆச்சரியமான விஷயமாக, கீரிப்பிள்ளை மற்றொரு பக்கத்தில் இருந்து பாம்பை தாக்க வருகிறது. பாம்புடன் விடாமல் சண்டையிட்டு அதை தோற்கடித்து விடுகிறது. 

நாகப்பாம்பு மற்றும் கீரிப் பிள்ளையின் வேற லெவல் சண்டையை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது இன்ஸ்டாகிராமிலும் Wildanimalia என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

‘பலவான் வெல்வான்’ என்பதற்கு இந்த வீடியோ ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது என ஒருவர் எழுதியுள்ளார். ‘பாம்பை அந்த கீரிப் பிள்ளை ஆட்டிப்படைத்து விட்டது’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | வம்பிழுத்த பெண்ணை வெச்சி செஞ்ச குரங்கு: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News