கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 2012-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தின் நியமன உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார். நாடாளுமன்றத்தில் இவரின் செயல்பாடு குறித்தும் வருகைப்பதிவு குறித்தும் அவ்வப்போது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறதது.
இதனால் அவரது உறுப்பினர் பதவியின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியாவில் விளையாட்டின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி குறித்த தனது கன்னி உரையை சச்சின் நாடாளுமன்றத்தில் வெளியிட தயாராக இருத்தார். ஆனால், குஜராத் தேர்தல் பிரசார விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஏற்பட்டது.
இதனால் தனது கன்னி உரையை பேச முடியாமல் சச்சின் தவித்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தான் பேச நினைத்த விசயத்தினை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 15 நிமிட வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் தெவிவித்துள்ளதாவது...
"விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். இந்தியாவில் மட்டும் 75 மில்லியனுக்கும் மேல் மக்கள் நீரிழிவு குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடல் பருமன் பாதிப்பில் உலகளவில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. எனவே இந்தியாவில் ஆரோக்கியமான விளையாட்டு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநகரங்களிலும் அதிகளவிலான மைதானங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் பிரத்தியேக விளையாட்டு நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும்."
என தெரிவித்துள்ளார்