Video: டோனி-யை மிஞ்சும் பாண்டியா, விட்டு கொடுக்காமல் டோனி!

போட்டியின் முடிவினை யாராலும் கணிக்க முடியாமல் போனது. 

Last Updated : Dec 13, 2017, 02:04 PM IST
Video: டோனி-யை மிஞ்சும் பாண்டியா, விட்டு கொடுக்காமல் டோனி! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி இந்திய அணியில் மிகச்சிறந்த "பிட்னஸ்" வீரர்களில் ஒருவர் என மீண்டும் நிருபித்துள்ளார்.

மொஹாலியில் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான் பயிற்சியில் இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டனர்.

பயிற்சிக்குப் பின்னர் டோனி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரின் 100 மீட்டர் ஓட்டப் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் 36-வயது டோனி, 26-வயது பாண்டியா-வுடன் மோதினார்.

டோனியை மிஞ்ச பாண்டியாவும், விட்டு கொடுக்காமல் டோனியும் வேகமாக ஓடினர், இதனால் போட்டியின் முடிவினை யாராலும் கணிக்க முடியாமல் போனது. எனினும் இப்போட்டியில் தன்னைவிட 12 வருடம் இளம் வீரரான பாண்டியாவுடன் போட்டிப் போட்டு தன் பிட்னஸினை நிரூபித்த டோனி, இந்திய அணியில் மிகச்சிறந்த "பிட்னஸ்" வீரர்களில் ஒருவர் என மீண்டும் நிருபித்துள்ளார்.

உங்களுக்காக அந்த நிகழ்வின் பதிவு வீடியோவாக!

Video Courtesy: Twitter/@BCCI

Trending News