உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் சொந்த வழிகளில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடி வருகின்றனர். சிலர் வீடுகளுக்குள் தங்கியிருத்தல், சமூக தூரத்தை பராமரித்தல், உடல் ரீதியான தொடர்பைத் தவிர்ப்பது, முகமூடி அணிவது மற்றும் சரியான இடைவெளியில் கைகளைக் கழுவுதல் போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்லோவாக்கியா ஜனாதிபதி தனது உடைக்கு ஒத்த நிறத்தில் முகமூடி அணிந்து இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கொரோனா அச்சத்திற்கு மத்தியில் தென் கொரியாவில் உள்ளவர்கள் தங்கள் முகமூடிகளைச் சுற்றி மேக்கப் அணிவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது முதல் இளஞ்சிவப்பு நிறங்களைக் கேட்கும் நபர்கள் வரை, எல்லோரும் இந்த தொற்றுநோய்களின் போது தங்கள் தோற்றத்தை அழகாகக் காண்பதற்கான வழியைக் கண்டுபிடித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் ஸ்லோவாக்கியாவின் ஜனாதிபதி, சுசானா கபுடோவா, முகமூடிக்கு ஒரு நாகரீகமான திருப்பத்தைச் சேர்க்க மக்களுக்கு வேறு வழியைக் கற்றுகொடுத்துள்ளார்.
தனது உடையின் வண்ணத்தில் அழகியு முகமூடி அணிந்திருக்கும் அவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சனிக்கிழமை (மார்ச் 21), சாதாரண மக்கள் (ஓலானோ) கட்சியின் தலைவரான இகோர் மாடோவிக் தலைமையிலான மைய-வலது கூட்டணி அரசாங்கத்தை அவர் நியமித்தார். விழாவின் போது, பங்கேற்பாளர்கள் அனைவரும் கையுறைகள் மற்றும் முகமூடிகளை அணிந்திருந்தனர், ஆனால் அங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது சுசானா கபுடோவாவின் முகமூடிதான்.
இவர் இப்படி ஏதாவது செய்வது இது முதல் முறை அல்ல. சில நாட்களுக்கு முன்பு நடந்த மற்றொரு நிகழ்வுக்கு, அவர் ஒரு பிளேஸர் ஆடை அணிந்திருந்தார், அந்த நேரத்திலும், அவரது முகமூடியின் நிறம் அந்த ஆடையுடன் பொருந்தியது குறிப்பிடத்தக்கது.