Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி., Trailer வெளியானது!

பிரபல தொலைக்காட்சி தொடரான Man Vs Wild நிகழ்ச்சில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது!

Last Updated : Jul 29, 2019, 02:04 PM IST
Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி., Trailer வெளியானது! title=

பிரபல தொலைக்காட்சி தொடரான Man Vs Wild நிகழ்ச்சில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது!

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான Man Vs Wild நிகழ்ச்சி, உலகம் முழுவதும் அனைவரது கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், அபாயகரமான உயிரினங்களை உயிரோடு உண்ணுவதில் திறமையானவர்.

யாரும் செல்லா காட்டுக்குள் சென்று பயணம் செய்வும், அருவியில் குதிப்பதுமாய் பார்பவர்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்பவர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி, இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளார். வன விலங்கு, வன வாழ்வியல் முறையினை பெருமைபடுத்தும் விதமாக இந்த முயற்சியை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார் என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டத்தினை Man Vs Wild தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Trending News