வைரல் வீடியோ: பாகிஸ்தான் பத்திரிகையாளரிடம் யானை செய்த சேட்டை

சமூக ஊடகங்களில், பலர் வேடிக்கையான வீடியோக்களை தினந்தோறும் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் சில நேரங்களில் சில வீடியோக்கள் மிகவும் வைரலாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2020, 08:27 PM IST
வைரல் வீடியோ: பாகிஸ்தான் பத்திரிகையாளரிடம் யானை செய்த சேட்டை title=

Elephant Funny Video: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையின் யானை காவன் (Kawan) கம்போடியாவின் சரணாலயத்திற்கு இன்னும் ஒரு வாரத்தில் அனுப்பப்பட உள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் நிருபர் யானையின் அருகே நின்று, அந்த யானை பற்றி செய்திகளை பகிர்ந்துக்கொண்டு இருந்தார். அப்போது, கவன் (Elephant), அவருக்கு பின்னால் இருந்து செய்த செயலை அடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சமூக ஊடகங்களில், பலர் வேடிக்கையான வீடியோக்களை தினந்தோறும் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் சில நேரங்களில் சில வீடியோக்கள் மிகவும் வைரலாகும். அதிலும் சிலநேரங்களில் ஏதாவது செய்தியை படமாக்கும் போது, திடீரென அதற்கு பின்னால் நடக்கும் சம்பவத்தினால், அந்த வீடியோ மிகவும் வேடிக்கையாக இருக்கும். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிருபருக்கும் இதே நிலை ஏற்பட்டது. நிருபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ |  Watch Viral Video: தண்ணீர் தொட்டியில் கும்மாளம் போடும் குட்டி யானை!

பாகிஸ்தான் (Pakistan) தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையின் யானை காவன் கம்போடியாவின் சரணாலயத்திற்கு அனுப்பப்பட்டது. இனி அங்கே தான் அந்த யானை தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட முடியும். பாகிஸ்தான் நிருபர் யானையின் அருகே நின்று அதைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்போதே, கவன் என்ற யானை பின்னால் இருந்து, அவர் மீது தண்ணீயை பீச்சி அடித்தது.

இந்த வீடியோ காட்சியை ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமாபாத் என்ற கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவை காணுங்கள்.

 

யானை காவனை கம்போடியாவிற்கு அனுப்புமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். இந்த யானை இலங்கையால் பாகிஸ்தானுக்கு பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் தனிமை காரணமாக தற்போது கம்போடியாவுக்கு அனுப்பப்பட்டது.

ALSO READ |  நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் இளம் பெண்... வைரலாகும் வீடியோ!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News