காரில் குத்தாட்டம் போட்ட மணப்பெண், வாய் பிளந்த மணமகன்: வீடியோ வைரல்

Bride Video: தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மணப்பெண்ணின் ஒரு வீடியோ மிகவும் வித்தியாசமாக உள்ளது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2022, 06:10 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
காரில் குத்தாட்டம் போட்ட மணப்பெண், வாய் பிளந்த மணமகன்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

திருமணம் ஆகி பிறந்த வீட்டை விட்டு ஒரு பெண் மணம்புரிந்து கிளம்பும்போது, தாய் தந்தையை பிரிய மனமில்லாமல் குமுறி குமுறி அழுவதை பார்த்துள்ளோம். குடும்பத்தை பிரியும் சோகத்தில் மணமகள் மிகவும் உணர்ச்சிவசப்படுவதுண்டு. 

ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மணப்பெண்ணின் ஒரு வீடியோ  மிகவும் வித்தியாசமாக உள்ளது. இந்த வீடியோவில், மணம் முடித்து கணவன் வீட்டுக்கு போகும் பெண், காரில் அமர்ந்தவுடன் குலுங்கி குலுங்கி நடனமாடுவதை காண முடிகின்றது. மணப்பெண்ணின் இந்த அசால்ட் பாணியைப் பார்த்து ஒட்டுமொத்த சமூக வலைதளமும் அதிர்ச்சியில் உள்ளது.

மேலும் படிக்க | அணிலின் தாகத்தை தீர்த்த மனிதர்! இணையத்தில் வைரலான காட்சி! 

மணமகளின் வேற லெவல் நடனம் 

வைரலாகி வரும் இந்த திருமண வீடியோவில், திருமணம் முடிந்து மணமகள் கணவன் வீட்டுக்கு புறப்படுவதைக் காண முடிகின்றது. அப்போது கேமராவின் கண்கள் மணமகள் மீது பட, அவர் காரில் அமர்ந்து மேளத்துக்கு ஏற்ப நடனமாடத் தொடங்குகிறார். 

பிறந்த வீட்டை பிரிந்து போவதால், மணமகள் உணர்ச்சிவசப்படவில்லை, அழவில்லை. ஆனால், இந்த மணப்பெண் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். மணமகளின் இந்த பாணியைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இணையத்தை கலக்கும் மணப்பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்: 

இப்படி ஒரு காட்சியை பார்த்திருக்க முடியாது 

இந்த வீடியோவில் காணப்படுகின்ற இப்படியொரு காட்சி பொதுவாக காணப்படுவதில்லை. இந்த வீடியோ bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகளும் ஆச்சரியத்துடன் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | பந்தா காட்டி பல்பு வாங்கிய சிங்கம், மாஸ் காட்டிய நீர்யானை: வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News