என்னடா லுக்கு? பறவையை கண்டு பயந்தோடிய பூனை!

பறவை ஒன்று பூனையின் எதிரில் வந்து நின்றதும் என்ன செய்வதென்று அறியாத பூனை பதட்டமடைந்து திடீரென்றுக்கு அந்த இடத்தைவிட்டு தலைதெறிக்க ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 21, 2022, 03:01 PM IST
  • தூரத்தில் இருந்து பறவையை பார்த்த பூனை.
  • பறவை பூனை அருகில் வந்து பயமுறுத்துகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
என்னடா லுக்கு? பறவையை கண்டு பயந்தோடிய பூனை! title=

நமக்கு எதிரியாக இருப்பவரோ அல்லது மனதுக்கு மிகவும் பிடித்தவரோ ஒரு இடத்தில நிற்கும்பொழுது நாம் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை நீண்ட நேரம் நின்று பார்த்துக்கொண்டே இருப்போம்.  நாம் பார்ப்பதை அவர்கள் கண்டுபிடித்திடாத வரையில் தான் நமக்கு பதட்டமில்லாமல் இருக்கும், அதுவே அவர் நாம் பார்ப்பதை கண்டுபிடித்து நமக்கு நேரெதிரே அந்த நபர் வந்து நிற்கும்பொழுது நமது ஹார்ட் பீட் எகிறி நமக்கு பதட்டத்தை ஏற்படுத்திவிடும்.  மனிதர்கள் மட்டும்தான் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்வார்களா என்றால் நிச்சயம் இல்லை, விலங்குகளும் கூட இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்பதை தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவின் மூலம் தெரிகிறது.  

பூனைக்குட்டி ஒன்று பறவையை பார்த்து தலைதெறிக்க ஓடும் அந்த காட்சி இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நகைச்சுவையான வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில் பறவை ஒன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு விளையாண்டு கொண்டு இருக்கின்றது, அந்த பறவையை பூனை ஒன்று மறைந்திருந்து விடாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறது.  அந்த பறவையின் ஒவ்வொரு அசைவையும், அந்த பூனை உற்றுநோக்கி கவனித்து பார்த்துக்கொண்டே இருக்கின்றது.  இப்படியே சில நிமிடங்கள் பூனை பறவையை விடாமல் பார்த்துக்கொண்டிருக்க திடீரென்று அந்த பறவை வந்து பூனையின் நேரெதிரே நிற்கிறது.  

மேலும் படிக்க | உ.பியில் காவலர்கள் போட்ட நாகினி நடனம்; வைரல் வீடியோ

உடனே பூனை, பறவையிடம் சீறுவது போல செய்துவிட்டு இரண்டடி மெதுவாக பின்புறமாக அடியெடுத்து ஒரே ஓட்டமாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிடுகிறது.  பூனையின் இந்த செயல் பலருக்கும் சிரிப்பை வரவழைத்து இருக்கிறது, இணையத்தில் பதிவேற்றப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை  முப்பத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்துள்ளன.

மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை... கிரேனில் ஸ்கூட்டருடன் தொங்கும் நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News